SBI Cheque பயன்படுத்துகிறீர்களா? அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 28, 2020

Comments:0

SBI Cheque பயன்படுத்துகிறீர்களா? அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீங்கள் ஒரு காசோலையில் கையெழுத்திட்டுள்ளீர்களா, அதை அவசரமாக நிறுத்த விரும்புகிறீர்களா? வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு உள்ள வங்கி கிளைக்கு செல்லாமலேயே அதை நிறுத்தும் வசதியை பாரத ஸ்டேட் வங்கி வழங்குகிறது. உங்கள் வீட்டில் வசதியாக இருந்துக் கொண்டு ஒரு காசோலை செயலாக்கப்படுவதை நீங்கள் நிறுத்தலாம். எஸ்பிஐ யின் YONO Lite ஆப்பை பயன்படுத்தி இதை நீங்கள் செய்யலாம் YONO Lite
YONO Lite எஸ்பிஐ ஆப்பை பயன்படுத்தி ஒரு காசோலையை எவ்வாறு நிறுத்துவது. Yono Lite SBI ஆப்பில் லாகின் செய்து கொள்ளவும். 'Requests' >> 'Cheque Book' >> 'Stop/Revoke Cheque' என்பதை சொடுக்கவும். 'Stop Cheque' எனற பொத்தானை அழுத்தவும். வங்கி கணக்கு எண்ணை தேர்ந்தெடுக்கவும் காசோலையின் தொடக்க எண் (start cheque numbe) (கண்டிப்பாக) மற்றும் முடியும் எண் (end cheque number) ஆகியவற்றை வழங்கவும். கருவி வகையைத் தேர்ந்தெடுக்கவும். REASON
காசோலையை நிறுத்துவதற்கான காரணத்தை வழங்கவும். இது கட்டாயத் தேவை நீங்கள் காசோலையை நிறுத்துவதற்கான காரணத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளை ஏற்றுக் கொள்ளவும். சமர்ப்பி என்பதை சொடுக்கவும். கைபேசியில் கிடைக்கப்பெற்ற OTP எண்ணை வழங்கவும். நீங்கள் கோரிய காசோலை(கள்) நிறுத்தப்படும். காசோலையை நிறுத்த இது ஒரு சுலபமான வழியாகும். வங்கி இந்த சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. ஒரே நேரத்தில் பல காசோலைகளை நிறுத்த நீட்டிக்கப்பட்ட வசதி பயன்படுத்தப்படலாம் இது மட்டுமல்ல நீங்கள் காசோலையை நிறுத்தியதையும் ரத்து செய்யலாம் (cancel the Cheque stop). இது எப்படி என்பதை பார்ப்போம். Select Account Number
Yono Lite SBI க்குள் லாகின் செய்துக் கொள்ளவும். 'Requests' >> 'Cheque Book' >> 'Stop/Revoke Cheque' என்பதை சொடுக்கவும். 'Revoke Cheque' என்ற பொத்தானை அழுத்தவும். உங்கள் வங்கி கணக்கு எண்ணை தேர்வு செய்யவும். நீங்கள் திரும்ப பெற வேண்டிய (revoke) காசோலையின் தொடக்க எண் (start cheque numbe) (கட்டாயம்) மற்றும் முடியும் எண்ணை (end cheque number) வழங்கவும். கருவி வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
OTP
வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவும். சமர்பி என்பதை தேர்வு செய்யவும். கைபேசியில் கிடைக்கப்பெற்ற OTP எண்ணை உள்ளீடு செய்யவும். நீங்கள் கோரிய காசோலை (கள்) ரத்து செய்யப்படும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews