கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், போன் அழைப்புகள், வாட்ஸ்அப் மற்றும் இதர சாட் சேவைகளை வழங்கும் தளங்களை கொண்டு தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இதே காரணத்தினால் வாட்ஸ்அப் க்ரூப்களில் ஒருவருக்கும் வரும் குறுந்தகவல்களின் எண்ணிக்கையும் வழக்கத்தை விட அதிகரித்து இருக்கிறது. சமயங்களில் அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.
நல்லவேளையாக வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் நோட்டிஃபிகேஷன்களை மியூட் மற்றும் அன்மியூட் செய்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு க்ரூப் நோட்டிஃபிகேஷன்களை தேர்வு செய்த சில காலக்கட்டம் வரை மியூட் மற்றும் அன்மியூட் செய்து கொள்ளலாம்.
க்ரூப் மெசேஜ்களை மியூட் செய்த
எனினும், க்ரூப் மெசேஜ்களை மியூட் செய்த பின்பும் நோட்டிஃபிகேஷன் மற்றும் குறுந்தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் போன் வைப்ரேட் மற்றும் நோட்டிஃபிகேஷன் டோன் எதுவும் கேட்காது. மேலும் இதற்கான நோட்டிஃபிகேஷன் எதுவும் நோட்டிஃபிகேஷன் பேனலில் தெரியாது.
மியூட் மற்றும் அன்மியூட்
வாட்ஸ்அப் க்ரூப்களில் மியூட் மற்றும் அன்மியூட் அம்சங்களை இயக்க அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலி மற்றும் சீரான இணைய வசதி அவசியமானவை ஆகும்.
1 - வாட்ஸ்அப் செயலியில் ஏதேனும் க்ரூப் சாட் தேர்வு செய்ய வேண்டும்
2 - க்ரூப் பெயரை சிறிது நேரத்திற்கு அழுத்தி பிடிக்க வேண்டும், பின் மேலே தோன்றும் ஐகானில் மியூட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
3 - மாறாக க்ரூப் சாட் சென்று மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து மியூட் நோட்டிஃபிகேஷன்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்
4 - இனி எவ்வளவு நேரத்திற்கு க்ரூப் நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்
நோட்டிஃபிகேஷன்களை அன்மியூ
க்ரூப் நோட்டிஃபிகேஷன்களை அன்மியூட் செய்ய க்ரூப் சாட் சென்று மேலே உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து அன்மியூட் நோட்டிஃபிகேஷன்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.