கூகுள் நிறுவனம் கொண்டுவரும் புதிய திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம், அதனபடி வீடியோ கான்ஃபெரன்சிங் பயன்பாடுகள் அதிகரித்துவரும் தேவைக்கு மத்தியில் கூகுள் இறுதியாக தனது Hangouts மீட் மற்றும் Hangouts சாட் சேவைகளை Google Meet மற்றும் Google Chat ஆக புதுப்பித்துள்ளது.
இந்த தகவலை தி வெர்ஜ் தளத்திற்கு 'Hangouts' பிராண்டிங் அகற்றப்பட்டதை தேடல் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. குறிப்பாக கூகுள் தனது Hangouts Meet ஐ ஏப்ரல் 8 ஆம் தேதி Google Meet என்று மறுபெயரிட்டது கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில் அடுத்த சில மணி நேரத்தில் Hangouts Chat என்றும் மாற்றப்பட்டது.
கூகுள் சாட்
ஏற்கனவே கூகுள் வரவிரக்கும் ஜி சூட் வெளியீடுகள் பக்கத்தின் மூலம் 'Hangouts'அக்கற்றுவதாக தகவல் தெரிவித்தது,ஆனால் கூகுள் சாட் மற்றும் கூகுள் மீட் என்று குறிப்பிடவில்லை.
மேலும் ஜி சூட் பயனர்களுக்கானது என்றாலும், நுகர்வோர் பதிப்பான'Hangouts Chat'தொடர்ந்து இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு Hangouts இன் நுகர்வோர் (கிளாசிக்) பதிப்பில் எந்த மாற்றங்களும் இருக்காது என கூகுள் செய்தி தொடர்பாளர் தி வெர்ஜ் தளத்திற்கு உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளாசிக் ஹேங்கவுட்ஸ்
கூகுளின் கிளாசிக் ஹேங்கவுட்ஸ் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன, மேலும் ஜிமெயிலிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இந்த பயன்பாடு ஆண்ட்ராய்டு-ல் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது.
மேலும் 2017-ம் ஆண்டில் Hangouts Chat மற்றும் Hangouts Meet (இப்போது Google Chat மற்றும் Meet) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், கூகிள் 'கிளாசிக்' Hangouts ஐ ஓய்வு பெற செய்வதாக கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் மேலே கூறியதுபோல ஜி சூட் அல்லாத பயனர்களுக்கு இந்த பதிப்பு இன்னும் நிறுவனத்தால் ஆதரிக்கப்படும்.
ஐஒஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு
அதாவது இதன்பொருள் என்றால் உங்கள் வெப் ஜிமெயில் கணக்கு ஐஒஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு சாதனம் இப்போதே ஹேங்கவுட்களின் நுகர்வோர் பதிப்பைக் காண்பிக்கும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.