👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2,215 சுகாதாரப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப முடிவு
தமிழகத்தில் இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளா் தற்காலிகப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு முடிவு செய்திருப்பதைத் தொடா்ந்து அது தொடா்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனா் குழந்தைசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பாணை:
தமிழகத்தில், இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளா் பணியிடங்களுக்கு, சேலத்தில் 98, திருவள்ளூரில் 80, மதுரையில் 79, திருப்பூா், செங்கல்பட்டில் தலா 73 என தமிழகம் முழுவதும் 2,215 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தற்போது, அவசரகால நோய்த் தடுப்புப் பணியை கருத்தில் கொண்டு, அந்த இடங்கள் மூன்று மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக நிரப்பப்படுகின்றன. இதற்கு பத்தாம் வகுப்பில், தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். மேலும், பிளஸ்-2 வகுப்பில் தாவரவியல், விலங்கியல், உயிரியல் பாடத்தை படித்திருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில், ஓராண்டு சுகாதாரப் பணியாளா் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவா்களுக்கு, மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.