தமிழகத்தில் வீட்டில் கண்காணிப்பில் உள்ளவர்கள்: 90,543
கண்காணிப்பில் 28 நாள்கள் முடிந்தவர்களின் எண்ணிக்கை: 5,315
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட எண்ணிக்கை: 4,448
இதில், 407 பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை."
தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை: 485
தமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை: 3
தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை: 7
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 411 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"தேனியைச் சேர்ந்த கரோனா வைரஸ் பாதிப்பு நபரின் மனைவி (53), தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று மூச்சுத்திணறல் அதிகமாகி பிற்பகல் 2.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.