ஜியோ நிறுவனத்தின் இருமடங்கு டேட்டா சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலியின் மை வவுச்சர்ஸ் பகுதியை கிளிக் செய்தல் வேண்டும்.Reliance Jio Starts Offering Double Data With All Broadband Plans ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது,அதன்படி இந்நிறுவனம் தனது ஃபைபர் டு ஹோம் பிராட்பேண்ட் இரு மடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஃபைபர்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது என்னவென்றால், ஜியோ ஃபைபர் சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இருமடங்கு டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மை வவுச்சர்ஸ்
அதன்படி ஜியோ நிறுவனத்தின் இருமடங்கு டேட்டா சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலியின் மை வவுச்சர்ஸ் பகுதியை கிளிக் செய்தல் வேண்டும். நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில தினங்களில் ஜியோவின் இருமடங்கு டேட்டா சலுகைக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நாடு முழுவதும் பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணியாற்றி வருவதால் டேட்டா பயன்பாடு கணிசமான அளவு அதிகரிக்கும். இதற்கு முன்னதாக ஜியோ பிரீபெய்ட் சலுகையின் பலன்களை மாற்றியமைத்து ஒவ்வொரு சலுகையிலும் டேட்டா வழங்குவதாக அறிவித்து இருந்தது.
ஜியோ ஆட் ஆன் சலுகை
மேலும் ஜியோ ஆட் ஆன் சலுகைகளின் விலை ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இவற்றில் தற்சமயம் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு இருமடங்கு டேட்டா தவிர ஜியோ அல்லதா மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான நிமிடறங்களும் இருமடங்காக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.11 டேட்டா வவுச்சரின் கீழ் பயனர்களுக்கு 400 எம்.பி 4 ஜி டேட்டா வழங்கப்பட்டது.
அதன்பிறகு, ரூ.21 வவுச்சரின் கீழ் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.
அதேபோல், ரூ.51 திட்டத்தின் கீழ் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.
இறுதியாக, ரூ.101 வவுச்சரின் கீழ் அதிகப்படியாகப் பயனருக்கு 6 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.
தற்போது கூடுதலாக வழங்கப்படும் திட்டங்கள்
75 நிமிடம் காலவரையறை
ரூ.11-க்கு வழங்கப்படும் திட்டங்களானது அன்லிமிட்டெட் ஜியோ டூ ஜியோ கால் வழங்குகிறது அதோ 800 எம்பி இணையதள சேவையையும் வழங்குகிறது. மேலும் ஜியோ அல்லாத பிற தொலைத் தொடர்பு நிறுவன குரல் அழைப்புகளுக்கு 75 நிமிடம் காலவரையறை வழங்குகிறது.
அதேபோல் ரூ.21-க்கு வழங்கும் திட்டமானது அன்லிமிட்டெட் கால் வசதியும் தினசரி 2 ஜிபி டேட்டா சலுகையும் 200 நிமிட ஜியோ அல்லாத குரல் அழைப்புகளுடன் கிடைக்கிறது. ரூ.51-க்கு கிடைக்கும் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு 6 ஜிபி டேட்டே மற்றும் 500 நிமிட ஜியோ அல்லாத குரல் அழைப்புகளுடன் கிடைக்கிறது. ரூ.101-க்கு கிடைக்கும் திட்டமானது வரம்பற்ற குரல்அழைப்பு ஆனால் இதில் 12 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மேலும் இதில் 1000 நிமிட ஜியோ அல்லாத பிற தொலைத் தொடர்பு நிறுவன குரல் அழைப்புகளுடன் கிடைக்கிறது.
ஜியோவின் ரூ.251 டேட்டா வவுச்சர்
ஜியோவின் ரூ.251 டேட்டா வவுச்சர் காம்போ திட்டங்களுக்கு மட்டுமே செல்லுபடி ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து கிடைக்கும் இந்த நான்கு புதிய டேட்டா வவுச்சர்கள் வரம்பற்ற காம்போ திட்டங்களின் மேல் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றாலும் கூட, ஜியோவின் ரூ.251 டேட்டா வவுச்சர் திட்டத்தைப் பயனர்கள் ஒரு முழுமையான திட்டமாகப் தனியாக பயன்படுத்திக்கொள்ளலாம். ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து வாய்ஸ் காலிங் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை தேவையில்லை என்ற பயனர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.