Search This Blog
Monday, March 30, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ரீசார்ஜ் கடைகள் எதுவும் இல்லையா? கவலை வேண்டாம்
ரீசார்ஜ் கடைகள் எதுவும் இல்லாததினால், ஆன்லைன் ரீசார்ஜ் செய்ய முடியாதவர்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்காக ஜியோ நிறுவனம் இப்பொழுது புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஜியோ பயனர்கள் உங்கள் அருகாமையில் உள்ள ATM மையத்திற்கு என்று உங்கள் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
ஏ.டி.எம் மெஷின் மூலம் ரீசார்ஜ் ஆன்லைன் இல் ரீசார்ஜ் செய்ய இயலாதவர்களுக்காக ஜியோ நிறுவனம் புதிய ஏ.டி.எம் மெஷின் ரீசார்ஜ் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் ஜியோ பயனராக இருந்தால் இப்பொழுது உங்களால் அருகில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து உங்கள் மொபைல் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். அட உண்மையாய் தான் சொல்கிறோம் ஏ.டி.எம் மெஷின் மூலமாக உங்கள் ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். உங்களுடைய ஜியோ எண்ணிற்கு ATM மெஷின் மூலம் எப்படி எளிதாக ரீசார்ஜ் செய்வது என்று தெரிந்துகொள்ளலாம். முதலில் உங்கள் அருகாமையில் உள்ள ATM செல்லுங்கள். உங்கள் சிப் பொருந்திய ATM அட்டையை மெஷினில் பயன்படுத்துங்கள். மெனுவில் இருந்து Recharge என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய 10 இலக்கு மொபைல் எண்ணை என்டர் செய்யுங்கள். ATM PIN நம்பர் இப்போது உங்கள் 4 இலக்க ATM PIN நம்பரை உள்ளிடுங்கள். உங்களுக்குத் தேவைப்படும் ரீசார்ஜ் திட்டத்தின் விலையைச் சரியாகப் பதிவிடுங்கள். MyJio App பயன்பாட்டில் உள்ள சரியான ரீசார்ஜ் தொகையைத் தான் உள்ளிட்ட வேண்டும். ஆகையால் ஒன்றிற்கு இரண்டு முறை எண்களைச் சரிபார்த்து என்டர் செய்யுங்கள். ரீசார்ஜ் தொகையை என்டர் செய்து உறுதி செய்த பின் மெஷினில் உள்ள ENTER பட்டனை அழுத்துங்கள்
எளிதாக ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள் ATM மெஷின் டிஸ்பிளேயில், ரீசார்ஜ் செய்யப்பட வேண்டிய தொகை உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்படும் என்று காண்பிக்கும். அதனைத் தொடர்ந்து உங்கள் எண் ரீசார்ஜ் செய்யப்படும். ரீசார்ஜ் வெற்றியடைந்தால் நீங்கள் ரீசார்ஜ் செய்த எண்ணிற்கு மெசேஜ் வரும். முக்கிய குறிப்பு இந்த எளிய செயல்முறையைப் பின்பற்றி, உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தில் ATM அட்டையைப் பயன்படுத்தி அருகில் உள்ள ஏடிஎம் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். முக்கிய குறிப்பு, ரீசார்ஜ் தொகையைச் சரியாக என்டர் செய்யுங்கள். உங்கள் திட்டத்திற்கான சரியான மதிப்பு எண் மிகவும் சரியாக இருப்பது அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
மக்கள் நலன் கருதி கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அரங்கம் எடுத்த 21 நாள் ஊரடங்கு மக்களின் இயல்பு நிலையைப் பெரிதும் பாதித்துள்ளது. பலருக்கும் பலவிதமான சிக்கல் ஏற்பட்டுள்ளது, இருப்பினும் அவர்களின் அன்பானவர்களுடன் ஸ்மார்ட்போனில் தொடர்பில் உள்ளனர்.
நீங்கள் ஒரு ஜியோ பயனரா? உங்கள் ஜியோ எண்ணிற்கு ATM மெஷின் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரியுமா? வாங்க.. ஈஸியா எப்படி ஜியோ நம்பரை ATM மெஷினில் ரீசார்ஜ் செய்வது எப்படினு இந்த பதிவில் பார்க்கலாம்.முதலில் உங்கள் அருகாமையில் உள்ள ATM மெஷின் இருப்பிடத்திற்கு செல்லுங்கள்.
உங்கள் ATM கார்டை மெஷின் செருகுங்கள். இப்போது "ரீசார்ஜ் (Recharge)" என்ற விருப்பத்தை தேர்வு செய்யுங்கள். நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய எண்ணை உள்ளிடுங்கள். இப்போது மெஷின் உங்கள் 4 இலக்க PIN நம்பரை உள்ளிட சொல்லி கேட்கும். அப்போது PIN நம்பரை உள்ளிடுங்கள். அடுத்து, நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய பண மதிப்பை உள்ளிடுங்கள். MyJio ஆப் மூலம் சரியான ரீசார்ஜ் எண்ணை தான் உள்ளிடுகிறோமா என்று ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
சரிபார்த்துவிட்டு உறுதி செய்ய ENTER பொத்தானை அழுத்துங்கள். இப்போது ATM மெஷின் திரையில், ரீசார்ஜ் மெசேஜ் தோன்றும் மற்றும் நீங்கள் குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கில் இருந்து எடுக்கப்படும் என்று காண்பிக்கும். ரீசார்ஜ் வெற்றிகரமாக ஆகியிருந்தால் நீங்கள் ரீசார்ஜ் செய்த எண்ணிற்கு மெசேஜ் வரும்.அவ்வளவுதான், ATM மெஷின் மூலம் உங்கள் ரீசார்ஜ் வெற்றிகரமாக முடிந்தது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ATM மெஷின் மூலம் எளிதாக Jio ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.