Breaking

Sunday, March 15, 2020

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு மார்ச் 31 வரை விடுமுறை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 107 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது மேலும் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பல்கலைக்கழக துணை வேந்தர் ஏ.பி. தாஸ் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சத்தால் புதுச்சேரியிலும் எல்.கே.ஜி முதல் 5ஆம் வகுப்பு வரை நாளை முதல் மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு.
தமிழ்நாடு மத்திய பல்கலை.க்கு மார்ச் 31 வரை விடுமுறை- திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலை.க்கு மார்ச் 31 வரை விடுமுறை என துணைவேந்தர் தாஸ் அறிவித்துள்ளார். மார்ச் 31-ம் தேதி வரை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog