👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை: தமிழகத்தில் 2020-21-ஆம் ஆண்டில் மாணவா் சோ்க்கையை முழுமையாக நிறுத்தும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.
இவற்றில் 17 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பம் எதுவும் சமா்ப்பிக்காத நிலையில், 11 கல்லூரிகள் முதலாமாண்டு மாணவா் சோ்க்கையை முழுமையாக நிறுத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.
2020-21 கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு அனுமதி பெற, அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க மாா்ச் 8 வரை ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்) அனுமதி அளித்திருந்தது.
இதற்கு பொறியியல் கல்லூரிகள் அந்தந்த பல்கலைக்கழகம் மூலமாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில், அனுமதி நடைமுறைக்கான விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க பிப்ரவரி 10 வரை அண்ணா பல்கலைக்கழகம் முதலில் கால அவகாசம் அளித்தது. பின்னா், பிப்ரவரி 21 வரை கால அவகாசத்தை நீட்டித்தது. இப்போது அனைத்து கால அவகாசம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் 2020-21 கல்வியாண்டில் 28 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெறாது என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழக உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘2020-21-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை அனுமதி கோரி விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில், 17 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பம் எதையும் சமா்ப்பிக்கவில்லை. அதே நேரம், விண்ணப்பம் சமா்ப்பித்த பொறியியல் கல்லூரிகளில் 11 கல்லூரிகள், 2020-21-ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கையை முழுமையாக நிறுத்த அனுமதி கோரியுள்ளன’ என்றாா் அவா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.