Search This Blog
Monday, March 09, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாசா நடத்தும் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா செல்லும் தமிழக மாணவிக்கு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி
நாசா நடத்தும் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா செல்லும் தமிழக மாணவிக்கு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையை சேர்ந்த மாணவி லட்சுமி பிரியாவுக்கு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத் தெரு பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார்-தீபா தம்பதியினர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மூத்த மகளான லட்சுமிபிரியா என்பவர் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
உயிரியில் கணிதப் பாடப் பிரிவில் படிக்கும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி வீரர் டான் தாமஸ் பள்ளிகளில் கலந்து கொண்டநிகழ்ச்சியினை நேரில் பார்த்தபிறகு நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல உரிய தேர்வினை இணையதளம் மூலம் ஆர்வமுடன் எழுதியுள்ளார். இதில் வெற்றி பெற்ற மாணவி லட்சுமி பிரியா சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் அந்த மாணவிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது; நாசா நடத்தும் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா செல்வதற்கான போக்குவரத்து கட்டணத்தை செலுத்த அவருக்கு பொருளாதார உதவி தேவைப்படுகிறது. லட்சுமி பிரியாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கே.எஸ்,அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
ACHIEVEMENT
Politicians
STUDENTS
நாசா செல்லும் 11-ம் வகுப்பு தமிழக மாணவிக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி
நாசா செல்லும் 11-ம் வகுப்பு தமிழக மாணவிக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.