Breaking

Sunday, March 08, 2020

1 - 5-ம் வகுப்புகளுக்கு ஏப்.1-ல் இறுதி பருவத்தேர்வு கல்வித்துறை அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ல் தொடங்கி 20-ம் தேதி வரை இறுதி பருவத்தேர்வு நடக்கும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, அனைத்து பள்ளிகளுக் கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: சென்னை மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வுகள் ஏப்ரல் 1-ல் தொடங்கி 20-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதன்படி 1, 3, 5-ம் வகுப்புகளுக்கு காலையும், 2, 4-ம் வகுப்புகளுக்கு மதியமும் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதற்கான விரிவான தேர்வுக்கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் எவ்வித மாற்றமும் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், இதர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கான தேர்வுக்கால அட்டவணையை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 வுக்கு மார்ச், 2; பிளஸ், 1க்கு, மார்ச், 4ல் பொதுத்தேர்வு துவங்கியது. 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு, வரும், 27ல் துவங்க உள்ளது.
இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான மூன்றாம் பருவ தேர்வை, ஏப்ரல், 1ல் துவக்கி, 20க்குள் முடிக்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கேற்ப, அனைத்து வகுப்புகளுக்கும், பாடங்களை முன்கூட்டியே முடித்து, தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog