👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Joint Entrance Examination எனப்படும் JEE Main April 2020 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், கடைசி தேதி எப்போது என்பது குறித்த விவரங்களை இங்கு காணலாம்
JEE Main 2020 தேர்வுக்கு விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி இன்றோடு முடியும் நிலையில், தற்போது கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்.சி., என்.ஐ.டி., ஆகிய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. என்ற ஒருங்கிணைந்த நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்.சி., என்.ஐ.டி., போன்ற நிறுவனங்களில் சேர்வதற்கு, இந்த நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு இரண்டு முறை நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
ஜனவரியில் முதல் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. அந்த வகையில் இரண்டாம் கட்ட ஜே.இ.இ. நுழைவு தேர்வானது வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 7ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, மார்ச் 6 முதல் பதிவு காலம் முடிந்தது. தொடர்ந்து மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று விண்ணப்பத்திற்கான அவகாசம் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதற்கான கூடுதல் விவரங்களை
https://jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு மேற்கொண்டு, ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பொறியில் படிப்பில் சேர வேண்டுமென்றால் JEE நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். 2020-21 கல்வியாண்டிற்கான JEE மெயின் தேர்வு, வரும் ஏப்ரல் 5 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது.
JEE Main April 2020 தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 6 ஆம் தேதியோடு விண்ணப்பப்பதிவு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், JEE Main April 2020 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 12 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்,
https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, மார்ச் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.