Search This Blog
Thursday, February 20, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
இந்த அறிவிப்பு நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு எதிரானதாக இருப்பதால், உடனடியாக அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் பணிமூப்பின் (சீனியாரிட்டி) அடிப்படையில்தான் நியமிக்கப்படுகின்றனா். இந்த நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 50 சதவீத தலைமை ஆசிரியா் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் இரா.தாஸ் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். ஆனால், மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியா்களே உள்ளனா். அதிலும் ஆசிரியா் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கின்றன. நேரடி தலைமை ஆசிரியா் நியமன முறையால் இடைநிலை ஆசிரியா்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரே ஒரு பதவி உயா்வான தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவியும் பறிபோய்விடும்.
ஆசிரியா்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சோ்ந்தவா்களாக உள்ளதால், மாணவா்களின் மனநிலை, பெற்றோா் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும். அதனால் தோ்வு நடத்தி தலைமை ஆசிரியா்களை நியமிக்காமல், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்கும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்று கேரள மாநில அரசு வலியுறுத்தி இருக்கிறது. பஞ்சாப், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள் தோ்வு முறையில் தலைமை ஆசிரியா்களை நியமிப்பதற்கான ஆரம்பப் பணிகளை தொடங்கிவிட்டன. எனவே, தமிழக அரசு நேரடி தலைமை ஆசிரியா் நியமன முறையைத் தவிா்க்க வேண்டும் என அவா் கூறியுள்ளாா்.
நாடு முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை நேரடியாக தேர்வு செய்யவேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தற்போது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
மொத்த தலைமையாசிரியர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதம் இப்படி நேரடியாக தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்றும் அவர்களுக்கு துறைவாரியான தேர்வு நடத்தி பணியில் நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சொல்கிறது.தங்களது புதிய கல்விக் கொள்கையின் மிக முக்கியமான அம்சம் இது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது..
தமிழகத்தைப் பொறுத்தவரை 24 ஆயிரத்து 321 ஆரம்பப் பள்ளிகளும் 6,966 நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கல்வியை கற்றுத்தரும்பணியில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர்..
இந்தநிலையில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நேரடியாக தலைமை ஆசிரியர்கள் என்றால், அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்…
தமிழக அரசு ஆரம்பப் பள்ளி கூட்டணியின் பொதுச் செயலாளரான ஆர் தாஸ் சொல்கிறார், ''முதலாவதாக ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அதிகளவில் இருப்பது கிராமப்புறங்களில் தான். இங்கு படிக்கும் மாணவ மாணவியரை கையாளுவது என்பது மிகவும் கடினமான காரியம் அனுபவம் இல்லா விட்டால் பல்வேறு சிக்கல்களை ஆசிரியர்கள் சந்திக்க நேரிடும்.
உதாரணத்திற்கு. குறிப்பிட்ட ஒரு கிராமத்தின் வாழ்வாதாரம் அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள் , அவர் களுடைய பொருளாதார சூழல், உறவு முறைகள், மண்ணுக்கே உண்டான பிரச்சனைகள் போன்றவற்றை உணர்ந்து நன்கு புரிந்து வைத்திருந்தால் மட்டுமே மாணவ மாணவியரை வழிநடத்த முடியும், பிரச்சினைகள் எழுந்தாலோ, மாணவ மாணவியர் சரியாக படிக்கவில்லை என்றாலோ, அவற்றை சரிப்படுத்த அவர்களின் பெற்றோர்களிடம் சுமூகமான அணுகுமுறையை கையாளவும் நன்கு அனுபவம் தேவை.. இப்படி செய்ய அங்கு தொடர்ந்து நீண்டகாலம் பணிபுரியும் ஆசிரியர்களால் மட்டுமே முடியும்.
தேர்வுகள் மூலம் நேரடியாக ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பதவிக்கு வருபவர்களால், கிராமப்புற பள்ளிகளை நிர்வகிப்பது என்பது மிகவும் சிக்கலான காரியம்.. உள்ளூர் மக்களின் மனநிலையைப் புரியாமல் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள்''
இன்னொரு புறம் இப்படி நேரடியாக பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதவி பதவி உயர்வுக்காக கிடைத்திருக்கும் ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாவார்கள் என்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. ஒரு கட்டத்திற்கு மேல் பதவி உயர்வு கிடைக்காது என்று தெரிந்துபோனால், ஆசியர்களிடம் பணியில் ஆர்வம் குறைந்துபோய் சோர்ந்தேபோய்விடுவார்கள்.
மொத்தத்தில் கிராமப்புற பள்ளிகளை அழிக்கும்வேலையைத்தான் பார்க்க ஆரம்பித்துள்ளது மத்திய அரசு என்பதே ஆசிரியர்களின் ஆதங்கமாக உள்ளது.
தேர்வுகள் நடத்தி நேரடியாக பள்ளித்தலைமை ஆசிரியர்கள் நியமனம் என்ற விஷயத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளப்போகிறது இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
HeadMaster
TEACHERS
தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள்நேரடி நியமனம்: ஆசிரியா்கள் கடும் எதிா்ப்பு
தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள்நேரடி நியமனம்: ஆசிரியா்கள் கடும் எதிா்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.