👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொதுத் தேர்வு மையங்களை, 'சிசிடிவி' வழியாக கண்காணிக்க, பள்ளி கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்குகிறது. பிளஸ் 1க்கு, மார்ச், 4; 10ம் வகுப்புக்கு, மார்ச், 27லும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வை நடத்த கண்காணிப்பாளர்கள், விடைத்தாள், வினாத்தாள்களை வாகனங்களில் எடுத்து செல்லும் பொறுப்பாளர்கள், தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகளில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், தேர்வை முறைகேடுகள் இல்லாமல் நேர்மையாக நடத்துவதற்கு, கேமராக்கள் வழியே கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.
ஏற்கனவே கேமராக்கள் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அந்த கேமராக்களின் பதிவை சேமித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் உள்ள தேர்வு மையங்கள், தேர்வு மைய வளாகம், வகுப்பறைகள் ஆகியவற்றில் உள்ள கேமராக்களை, தேர்வின் போது இயக்கவும், அந்த பதிவுகளை தனியாக சேமித்து வைத்து, பள்ளி கல்வித் துறை கேட்டால் வழங்கும்படியும், தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.