5 மற்றும் 8 வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு 60 மதிப்பெண்களுக்கே நடைபெறும்
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயப்பட தேவையில்லை என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க மட்டுமே தேர்வு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மாணவர்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சி ஏதுவாக தேர்வு என்று தெரிவித்த பள்ளி கல்வி ஆணையர், பொதுத்தேர்வு அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்தி வைக்கவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்படுகிறது.
இந்த சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. குழந்தைகளால் பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாது, பயம் கலந்த சூழல் காரணமாக கற்றல் திறன் பாதிக்கும் என்று பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.
ஒவ்வொருவரும் கல்வியறிவு பெற வேண்டியது அவசியம். தேர்ச்சி பெற முடியாத மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி, மனரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயப்பட தேவையில்லை என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க மட்டுமே தேர்வு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மாணவர்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சி ஏதுவாக தேர்வு என்று தெரிவித்த பள்ளி கல்வி ஆணையர், பொதுத்தேர்வு அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்தி வைக்கவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்படுகிறது.
இந்த சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. குழந்தைகளால் பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாது, பயம் கலந்த சூழல் காரணமாக கற்றல் திறன் பாதிக்கும் என்று பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர். ஒவ்வொருவரும் கல்வியறிவு பெற வேண்டியது அவசியம். தேர்ச்சி பெற முடியாத மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி, மனரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளி மாணவர்கள் பயப்பட வேண்டாம் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு குறித்து பயப்பட வேண்டாம். தேர்வு எழுதும் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள்.
அதற்கான ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்து உள்ளார். மாணவர்களின் கல்விதிறன் மற்றும் பள்ளிகள் எப்படி நடைபெறுகிறது? என தெரிந்துகொள்ளவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு நடைபெறும்.
தேர்வின்போது வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வருவார்கள். இதில் தவறான தகவல்கள் பரப்பபடுகிறது. மாணவர்களும், பெற்றோர்களும் பயப்பட வேண்டாம். மாணவர்களின் திறனை இந்த தேர்வுகள் மேம்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Search This Blog
Monday, February 03, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
5,8ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வு குறித்த பள்ளிக்கல்வி ஆணையரின் செய்திக்குறிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.