அந்த நல்லடையாள ஆசிரியர்களை 'அன்பாசிரியர்' என்ற விருதோடு கவுரவிக்க, பெருமையுடன் காத்திருக்கிறது 'இந்து தமிழ் திசை'. தமிழக பள்ளிக் கல்வித்துறையும் இந்த முன்னெடுப்புக்குத் துணை நிற்கிறது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள்.
* தொடர்ச்சியாகக் கற்பித்து வரும் தலைமை ஆசிரியர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.என்ன செய்ய வேண்டும்?
* 'இந்து தமிழ் ' இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
* இணையம் வழியே அனுப்ப முடியாதவர்கள், அன்பாசிரியர் விருதுக் குழு, இந்து தமிழ் திசை, 124, வாலஜா சாலை, சென்னை- 2 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பலாம். அன்பாசிரியர் தேர்வு முறை
* விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்படும்.
* தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 'இந்து தமிழ்' அலுவலத்தில் முதல் கட்ட நேர்காணல் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும்.
* நேர்காணலுக்கு தன்னிடமுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், பிற விவரங்களை ஆசிரியர்கள் எடுத்து வரவேண்டும்.
* மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிக்கட்ட நேர்காணல் பிப்ரவரி 16-ம் தேதி நடத்தப்படும்.
* மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 37 பேருடன் புதுச்சேரி சேர்த்து, 38 பேருக்கு பிப்ரவரி 23-ம் தேதி 'அன்பாசிரியர்' விருது வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?- https://connect.hindutamil.in/ இணைய முகவரியை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 7, 2020.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.