👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகளை மேம்படுத்துவதற்காக, மக்களிடம், 24 கேள்விகள் கேட்கப்பட்டு, கருத்துகள் பெறப்பட உள்ளன.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், ஈரோடு, திருப்பூர், தஞ்சை, திண்டுக்கல், வேலுார், துாத்துக்குடி ஆகிய நகரங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அங்கு நிலவும் வாழ்க்கை சூழல், சமூக மேம்பாடு, துாய்மை, திடக்கழிவு மேலாண்மை, குடிநீர், அவசர கால உதவிகள், மின்வசதி குறித்து கருத்து பெற, மத்திய அரசின், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம், 'எனது நகரம்; எனது பெருமை' என்ற பெயரில், செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
'ஆன்ட்ராய்டு' மொபைல் போனில்,
https://eol2019.org/citizenfeedback என்ற இணையதளத்தில், தங்கள் கருத்துகளை பதிவிடலாம். வரும், 29ம் தேதி வரை, இந்த கருத்து கேட்பில் பங்கேற்கலாம். இதில் பெறப்படும் கருத்து அடிப்படையில், சம்பந்தப்பட்ட நகரங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
-- நமது நிருபர் -
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.