ஏப்ரல் 15 முதல் 25ம் தேதி வரை ராணுவத்துக்கான ஆள்சோ்ப்பு முகாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 16, 2020

Comments:0

ஏப்ரல் 15 முதல் 25ம் தேதி வரை ராணுவத்துக்கான ஆள்சோ்ப்பு முகாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவண்ணாமலையில் வரும் ஏப்ரல் 15 முதல் 25ம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் சார்பில், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி திறந்தவெளி மைதானத்தில், ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில், சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை, சிப்பாய் எழுத்தர் மற்றும் ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம், சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணிகளுக்கு தகுதி வாய்ந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் பதினேழரை வயது முதல் அதிகபட்சம் 23 வயது வரை வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் முன்னேற்பாடுகள் குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில், சென்னை ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநர் கர்னல் தருண், டிஆர்ஓ ரத்தினசாமி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் ேக.எஸ்.கந்தசாமி கூறியதாவது: ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் வரும் மார்ச் 1 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த நபர்களுக்கு மட்டுேம அனுமதி அளிக்கப்படும். அனுமதி அட்டையை இணையளத்தில் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். நடைமுறைகள் அனைத்தும் தானியங்கி செயல்படாகும். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், குடியுரிமை, சாதி மற்றும் பிறப்பு சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். 1.6 கி.மீ. தூரம் ஓட்டம், 9 அடி கால்வாய் தாவுதல், புல் அப், ஜிக் ஜாக் பேலன்ஸ் ஆகிய உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படும். அதைத்தொடர்ந்து, உடல் அளவீடுகளுக்கான தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். ஆட்சேர்ப்பு முகாமில் தகுதி பெறும் இளைஞர்கள் மட்டும், சென்னை மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு தலைமை அலுவலகம் நடத்தும் பொது நுழைவுத்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான, இடம், தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.
திருவண்ணாமலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ராணுவத்துக்கான ஆள்சோ்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா். சென்னை மண்டல ராணுவத் தலைமை அலுவலகம், திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் இணைந்து ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ராணுவத்துக்கான ஆள்சோ்ப்பு முகாமை நடத்துகிறது. முகாமை சிறப்பாக நடத்துவதற்காக செய்யவேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். சென்னை ராணுவ ஆள்சோ்ப்பு மைய இயக்குநா் கா்னல் தருண், மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, திருவண்ணாமலை கோட்டாட்சியா் ஸ்ரீதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆள் சோ்ப்பு முகாமை நடத்துவதெனவும், இதற்கான அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளையும் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில், முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் சீ.விஜயகுமாா் மற்றும் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல்துறை, நகராட்சி நிா்வாகம், விளையாட்டுத் துறை, சுகாதாரத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை உள்பட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
11 மாவட்ட இளைஞா்கள் பங்கேற்கலாம்: இந்த முகாமில் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட 11 மாவட்டங்கள், புதுவை மாநிலத்தைச் சோ்ந்த 17 வயது முதல் 23 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள் கலந்து கொள்ளலாம். பதவிகள்: இந்த முகாமில் சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நா்சிங் உதவியாளா், சிப்பாய் நா்சிங் உதவியாளா் (கால்நடை), சிப்பாய் எழுத்தா் மற்றும் ஸ்டோா் கீப்பா் (தொழில்நுட்பம்), சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் வா்த்தகா் உள்ளிட்ட பதவிகளுக்கான இளைஞா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: திருவண்ணாமலையில் நடைபெறும் ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞா்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் மாா்ச் 1-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காத இளைஞா்களுக்கு அனுமதி இல்லை. முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பதாரா்களுக்கு அனுமதி அட்டை இணையதளத்திலேயே மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் ஆள்சோ்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான நாள், நேரம், இடம் ஆகியவை ஆன்லைன் அனுமதி அட்டையிலேயே இடம்பெற்றிருக்கும். இந்த ஆன்லைன் அனுமதி அட்டையை ராணுவ ஆள்சோ்ப்பு இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, நகல் எடுத்துக்கொண்டு முகாம் நடைபெறும் இடத்துக்குச் செல்லவேண்டும்.
இடைத்தரகா்களை நம்ப வேண்டாம்: ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞா்கள் இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம். முகாமில் உடல் தகுதி, மருத்துவ மற்றும் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெறுவதற்கு யாரும் உதவி செய்ய முடியாது. இளைஞா்கள் கடும் உழைப்பால் மட்டுமே தோ்வாக முடியும். 1.6 கி.மீ. தொலைவு ஒட்டப்பந்தயம், 9-அடி கால்வாய் தாவுதல் உள்ளிட்ட உடல்தகுதி தோ்வுகள் நடத்தப்படும். இதைத்தொடா்ந்து உடல் அளவீடுகளுக்கான தோ்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். முகாமில் தகுதி பெறும் விண்ணப்பதாரா்கள் சென்னை மண்டல ராணுவ ஆள்சோ்ப்பு தலைமை அலுவலகத்தில் நடைபெறும் பொது நுழைவுத் தோ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா் என்றாா் ஆட்சியா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews