நம்பிக்கையை மீட்க வேண்டும்
பண பலமும், அரசியல் செல்வாக்கும் உள்ளவர்கள் மட்டுமே, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்ற, தேர்வுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன், முறைகேடுகளுக்கு இடம் தராத வகையில் நடைபெறும் என்ற நம்பிக்கையை தேர்வாணையம் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 'டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் உயர்மட்டத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை. உயர்மட்டத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றவே, பெயருக்கு சில பலி ஆடுகளைக் கைது செய்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ.,க்கு தொடர்பு?
சிவகங்கையை சேர்ந்த எஸ்.ஐ.,ஒருவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர், சில மாதங்களுக்கு முன்பு நடந்த குரூப்2 ஏ தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர். எஸ்.ஐ.,யின் மனைவி, தம்பிகள், தம்பி மனைவி ஆகியோர் குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எஸ்ஐ மனைவி குரூப் 2 ஏ தேர்வில் மாநில அளவில் இரண்டாவது இடம்பிடித்துள்ளார். மற்றொரு தம்பியும் குரூப் 4 தேர்வில், மாநில அளவில் 10வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால், எஸ்ஐ மீது சிபிசிஐடி போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் இடைத்தரகராக செயல்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் எனக்கூறப்படுவதால், அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
. தேர்வு முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், முறைகேடு செய்து வெற்றி பெறும் எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. தவறு செய்தவர்கள் பெரும்புள்ளியாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். வருங்காலங்களில், எந்த ஓட்டையும் இல்லாமல், முறைகேடு இல்லாமல் தேர்வுநடத்தப்படும். முறைகேட்டில் ஈடுபட்ட கறுப்புஆடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில மையங்களில் முறைகேடு நடந்துள்ளதால், டிஎன்பிஎஸ்சி மீது குற்றம்சாட்டக்கூடாது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.