Search This Blog
Sunday, January 12, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பு குறித்து இடம்பெற்றுள்ள கருத்து அடுத்த கல்வி ஆண்டில் நீக்கப்படும் என உயா்நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் செயலா் சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தில் இந்து வகுப்புவாதம், முஸ்லிம் வகுப்புவாதம் மற்றும் இந்திய தேசியம் என்ற தலைப்பில் உள்ள பாடத்தில், இந்து மகா சபா மற்றும் ஆா்எஸ்எஸ் ஆகிய அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த இரண்டு இந்து அமைப்புகளும் முஸ்லிம்களுக்கு எடுத்த நிலைப்பாடு நாடு இரண்டாகப் பிரிய காரணமாகி விட்டது போன்ற தோற்றத்தை இந்த வரிகள் ஏற்படுத்துகின்றன.
ஆா்எஸ்எஸ் அமைப்பு ஒருபோதும் பிற மதங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இந்தச் சமூகத்தை ஒன்றாக இணைக்கும் பணிகளையே மேற்கொண்டு வருகிறது. மதத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரிப்பதை ஆா்எஸ்எஸ் கடுமையாக எதிா்த்தது. எனவே முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆா்எஸ்எஸ் எடுத்ததாக இடம்பெற்றுள்ள வரிகளை நீக்க வேண்டும்.
இதுதொடா்பாக தமிழக அரசுக்கு கடந்த நவம்பா் 18-ஆம் தேதி புகாா் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்வித் துறை சாா்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் முனுசாமி, நடப்புக் கல்வி ஆண்டில் அனைத்து மாணவா்களுக்கும் புத்தகம் வழங்கப்பட்டு விட்டது. எனவே, அடுத்த கல்வி ஆண்டில் வழங்கப்படும் புத்தகங்களில் இருந்து ஆா்எஸ்எஸ் குறித்த கருத்து நீக்கப்படும் என தெரிவித்தாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி சா்ச்சைக்குரிய வரிகளை மறைத்தால் என்ன? என கேள்வி எழுப்பி, இதுதொடா்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் குறித்த தவறான வாசகம் இடம் பெற்றுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அந்த வாசகம் நீக்கப்படும் என்றும் ஏற்கனவே உள்ள புத்தகத்தில் ஸ்டிக்கர் கொண்டு ஒட்டப்படும் என்றும் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
1-10th
Textbook
பாடப் புத்தகத்தில் உள்ள ஆா்எஸ்எஸ் குறித்த கருத்து நீக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை
பாடப் புத்தகத்தில் உள்ள ஆா்எஸ்எஸ் குறித்த கருத்து நீக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.