8ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனி தேர்வர் பதிவு துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 04, 2020

Comments:0

8ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனி தேர்வர் பதிவு துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத்தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்றல் ஏப்ரல் 2020-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.01.2020 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 27.01.2020 (திங்கட்கிழமை) முதல் 31.01.2020 (வெள்ளிக்கிழமை) வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். 2. தேர்வுக் கட்டண விவரம்: விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-மொத்தம் ரூ.175/-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்தலாம். 3. விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டியவை முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்
* விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் / பதிவுத்தாள் நகல் / பிறப்புச் சான்றிதழ் நகல்- இவற்றில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தைத் தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் * ஏற்கெனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின்/ சான்றிதழ்களின் நகல்களைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். * தனித்தேர்வர்கள் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 4. ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
5. இத்தேர்விற்கான விரிவான தகவல்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம். 6. சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் - ரூ.175/- தேர்வுக் கட்டணம் செலுத்தி: 31.01.2020 அன்று மாலை 5.00 மணி வரை. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews