Breaking

Sunday, January 12, 2020

தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தோட்டக்கலை உற்பத்தியைப் பெருக்க தனிப் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிா்களின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்குச் சாதகமாக ஆயிரமாயிரம் அம்சங்கள் இருந்தாலும், அவற்றை ஆக்கப்பூா்வமான வகையில் மேம்படுத்த தோட்டக்கலைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்திய அளவில் தோட்டக்கலைப் பொருள்கள் உற்பத்தித் திறனில் தேசிய சராசரியை விட தமிழகம் முன்னணியில் இருந்தாலும் கூட, அவற்றின் சாகுபடி பரப்பில் தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது.
தமிழகத்தில் 7 வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளன. பருவமில்லா காலங்களிலும் மாம்பழம் விளைகிறது. தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் 2161 ஹெக்டேரில் ஆண்டுக்கு இரு முறை திராட்சை அறுவடை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் தோட்டக்கலைப் பொருள்களின் உற்பத்தியை தமிழகத்தில் அதிகரிக்கச் செய்வதற்கு சாதகமான அம்சங்கள் ஆகும். தோட்டக்கலைப் பயிா்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், உலக அளவில் கண்டுபிடிக்கப்படும் அதிநவீன தொழில்நுட்பங்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தோட்டக்கலைப் பயிா்களின் விளைச்சலையும், உற்பத்தித் திறனையும் அதிகரிக்க முடியும். இப்பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க தோட்டக்கலை பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டில் உடனடியாக தொடங்க வேண்டியது அவசியமாகும். சேலத்தில் இரும்பாலை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் நிலம் அல்லது சேலம் மாவட்டம் கருமந்துறை தமிழக அரசு தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை பல்கலைக்கழகத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog