வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 06, 2020

Comments:0

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
2597444536aade21cdd68ffde48f8af4f8a46e79c
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான படிவங்களை ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வருமான வரித்துறை அலுவலகம் வெளியிடும். ஆனால், இந்த முறை அதற்கு மாற்றாக ஜனவரி 3ம் தேதியே 2020-2021 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.வருமான வரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள படிவங்களில் ஒன்று ஐ.டி.ஆர்.-1 சஹாஜ் படிவம் ஆண்டு வருமானமாக ரூ.50 லட்சம் ரூபாய் வரையில் கொண்ட தனிநபர்கள் இந்த படிவத்தில் கணக்கு தாக்கல் செய்யலாம். இன்னொரு படிவம் ஐ.டி.ஆர்.-4 சுகம்.
இந்த படிவத்தில் தனிநபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள், ரூ.50 லட்சம் வரையில் வருட வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யலாம். அதே சம்யாம் இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களில் 2 புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2 அல்லது அதற்கும் மேற்பட்டோர்களை பங்குதாரர்களாக கொண்டு சொந்த வீடு வைத்திருக்கும் தனிநபர்கள் மேற்கண்ட இந்த இரண்டு படிவங்களையும் வருமான வரி தாக்கல் செய்வதற்கு பயன்படுத்த முடியாது.
அவர்களுக்கு தனி படிவம் அறிமுகம் ஆகிறது. உரிய நேரத்தில், அந்த படிவம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 2 வது மாற்றம், ரூ.1 கோடிக்கு மேல் வங்கிக்கணக்கில் போட்டு வைத்திருக்கும் தனிநபர்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவழித்தவர்கள், மின்சார கட்டணம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கட்டியவர்கள் ஆகியோரும் ஐ.டி.ஆர்.-1 படிவத்தை பயன்படுத்த முடியாது. பின்னர் அறிமுகப்படுத்தப்படும் புதிய படிவத்தில் மட்டும் தான் அவர்கள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84696262