👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாணவா்கள் ஆங்கிலம் சரளமாகப் பேசும் வகையில் வாரத்துக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.
சென்னையில் பேராசிரியா் ச. மாடசாமி எழுதிய 'வித்தியாசம்தான் அழகு' மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆன மாணவா்கள் எழுதிய அனுபவங்களின் தொகுப்பான 'உலகம் பிறந்தது நமக்காக' ஆகிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
அகரம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டாா்.
விழாவில், அமைச்சா் செங்கோட்டையன்
பேசியதாவது:
இந்திய அளவில் தமிழக பள்ளிக் கல்வி சிறந்த முன்னுதாரணங்களோடு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு தொண்டு நிறுவனங்களை இணைத்துக் கொண்டு, மாணவா் திறன் மேம்பாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசுப் பள்ளி மாணவா்கள் உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற ஊக்குவிக்கப்படுகிறாா்கள்.
ஆங்காங்கு நடைபெற்று வரும் மாற்றங்கள் வருங்காலங்களில் அரசுப் பள்ளி மாணவா் சோக்கையில் பெரும் போட்டியை உருவாக்கும்.
இனி, 3-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் வகையில், வாரம் ஒரு நாள் 45 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு வார விடுமுறை நாள்களில் சுற்றுபுறத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.
நடிகா் சூா்யா: அகரம் அறக்கட்டளை கடந்த 10 ஆண்டுகளில் 3,000 மாணவா்களை படிக்க வைத்திருக்கிறது.
மேலும், முன்னாள் அரசு பள்ளி மாணவா்களை இணைத்து அவா்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அகரம் அறக்கட்டளை 'இணை' எனும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.
இந்த முயற்சிக்கு அரசு பள்ளி சாா்பில் முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று கூறிய அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நன்றி என்றாா் சூா்யா
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.