Search This Blog
Monday, December 16, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இலவச, 'லேப்டாப்' வழங்கிய விபரத்தை, நாளை தாக்கல் செய்யும்படி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக, லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கும் பணி, தற்போது துவங்கி, ஒரு மாதமாக நடந்து வருகிறது. அதிலும், கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடித்து, கல்லுாரிகள், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., கல்வி படித்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டும், லேப்டாப் வழங்கப்படுகிறது.
படிப்பை கைவிட்டவர்களுக்கு, லேப்டாப் வழங்க வேண்டாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், லேப்டாப் வழங்கப்பட்ட விபரங்களை, நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் சுகன்யா உத்தரவிட்டுள்ளார். எனவே, இன்று மாலைக்குள், மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கி முடிக்கும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
2017-18 மற்றும் 2018-19 -ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள், இலவச மடிக்கணினி பெற 16-ஆம் தேதி கடைசி நாள்.
-#பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குனர் சுகன்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 16ஆம் தேதிக்குள் கூடுதலாக இலவச மடிக்கணினிகள் தேவைப்பட்டால் அவற்றை பெறுவதற்கு தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மடிக்கணினிகள் மீதம் இருந்தால் அது குறித்த விவரங்களை 17ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்
உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி மாணவர்கள் 16ஆம் தேதிக்குள் இலவச மடிக்கணினி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
இலவச மடிக்கணினிகளைப் பெற இன்று கடைசி: கல்வித்துறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.