பாஸ்டேக் ஸ்டிக்கர்: ஜன.,15 வரை அவகாசம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 15, 2019

Comments:0

பாஸ்டேக் ஸ்டிக்கர்: ஜன.,15 வரை அவகாசம்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜன.,15 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டீக்கரை பெறுவதில் ஏற்படும் தாமதத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த அவகாசத்தை அளித்துள்ளது. பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள், ஒரு பாதையில் பணமாக செலுத்தி, பயணத்தை தொடரலாம். சுங்கச்சாவடிகளில் காத்து கிடக்கும் பிரச்னைக்கு முடிவுக்கு கொண்டு வர பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
டிசம்பர் 15ம் தேதியான, ஞாயிற்றுக்கிழமை இன்று முதல், டோல்கேட்களில் FASTag கட்டாயம் என்று, மத்திய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், அறிவித்துள்ளது. ஒருவேளை அப்படி செய்யாவிட்டால், இரட்டிப்பு தொகை வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1ம் தேதிக்குள், பாஸ்டேக் கட்டாயம் என்ற தனது முந்தைய உத்தரவை அரசு தளர்த்தி டிசம்பர் 15ம் தேதிவரை கால அவகாசம் கொடுத்திருந்தது நினைவிருக்கலாம். எனவே வாகன உரிமையாளர்கள், FASTag வாங்குவதிலும், ரீசார்ஜ் செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். வாகனங்களின் சீரான இயக்கத்தை உறுதிசெய்வதும், பணமில்லா பேமென்ட்டை ஊக்குவிப்பதும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதும் இதன் நோக்கம்.
ஒரு பாதை ஹைப்ரிட் வாகனங்களின் சீரான ஓட்டத்தை உறுதிசெய்வதும், பணமில்லா பேமென்ட்டை ஊக்குவிப்பதும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதும் நோக்கமாக இருப்பதால், டோல் பிளாசாக்களில் உள்ள அனைத்து பாதைகளிலும், பாஸ்டேக் வசதி கொண்டுவரப்படுகிறது. அதேநேரம், ஒரு பாதை மட்டும், ஹைப்ரிட் பாதையாக வைக்கப்படும். அதாவது, பாஸ்ட்டேக்குடன், பிற வகையில் கட்டணம் செலுத்துவோரும் இந்த வழியில் போகமுடியும். ஆனால், பிற வகையில் பணம் செலுத்தினால், இரட்டிப்பாக வசூலிக்கப்படும். ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள் ரேடியோ-அதிர்வெண் அடையாளத்தை (RFID) FASTag பயன்படுத்தி செயல்படுறது. இது தேசிய நெடுஞ்சாலை டோல் பிளாசாக்களில், வாகனம் கடந்து செல்லும்போது, அதற்கான, கட்டணத்தை தானாக கழித்துக் கொள்ளும். உங்களது, ப்ரீபெய்ட் அல்லது சேமிப்பு / நடப்புக் கணக்குடன் பாஸ்டேக் கணக்கு, இணைக்கப்பட வேண்டும். ப்ரீபெய்ட் கணக்கில் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப அதை முன்கூட்டியே, ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
Fastag எங்கே பெறுவது புதிய வாகனம் வாங்கும்போது, ஷோரூமிலேயே பாஸ்ட்டேக் வழங்கப்படும். பழைய வாகனங்களுக்கு, NHAI டோல் பிளாசாஸில் உள்ள பாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) இடங்களில் ஏதேனும் ஒரு புதிய பாஸ்டேக்கை வாங்கலாம். அல்லது, NHAI உடன் கூட்டுள்ள, எந்தவொரு தனியார் அல்லது பொதுத்துறை வங்கிகளிடமிருந்தும் ஒருவர் நேரடியாக ஒரு பாஸ்டேக்கைப் பெறலாம். பட்டியலில் சிண்டிகேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎப்சி வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை உள்ளன. Paytm மூலமும் FASTag ஐ வாங்கலாம். டோல் பிளாசாக்கள், இந்தியன் ஆயிலின் பெட்ரோல் பம்புகள், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், வங்கிகள், பேடிஎம் மற்றும் amazon.in ஆகியவற்றிலும் பெறலாம். கட்டண விவரங்கள் பாஸ்டேக் வழங்குபவர், வங்கி அல்லது நிறுவனம், சார்பில், ஒரு முறை சேர கட்டணம் 200 ரூபாய் வசூலிக்கும். பாஸ்டேக் கட்டணங்கள் மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை ஆகியவை வாகனத்தின் வகையைப் பொறுத்தது. வாகன உரிமையாளர்கள், இதுபற்றிய கட்டண விவரங்களை வழங்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
ரொக்க தள்ளுபடி டோல் பிளாசாக்களில் பாஸ்டேக்கைப் பயன்படுத்துவதன் மூலம், டோல் தொகையில் 2.5 சதவீத கேஷ்பேக்கை அரசு வழங்குகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து வாகனங்களின் இடைவிடாத இயக்கத்தை ஃபாஸ்டாக் உறுதி செய்கிறது. பணத்தை எடுத்துச் செல்லத் தேவையில்லை என்பதால் பணம் செலுத்துவதில் எளிமை உள்ளது. வாகனங்களின் இடைவிடாத இயக்கத்தால், இது காற்று, மாசுபாட்டைக் குறைக்கிறது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரசீதுகளை வழங்க டோல் பிளாசாக்கள் தேவையில்லை என்பதால், இது காகிதப் பயன்பாட்டையும் குறைக்கிறது. என்ன ஆவணங்கள் தேவை? வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி), வாகன உரிமையாளரின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், KYC ஆவணங்கள் (ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை). தனிப்பட்ட அல்லது வணிக பயன்பாட்டிற்கான வாகனங்கள் என்றால் மேற்கண்ட தேவைப்படும், ஆவணங்கள் வேறுபடலாம். உங்களிடம் தேவையான ஆவணங்கள் உள்ளதா என்பதை முதலிலேயே, உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்வது எப்படி? இந்தியன் ஹைவேஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் உருவாக்கியதுதான் My FASTag ஆப். இதைப் பயன்படுத்தி பாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்யலாம். வாடிக்கையாளர் வங்கி, கிரெடிட் / டெபிட் கார்டு மற்றும் யுபிஐ மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம். பேடிஎம் மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம் என்றாலும் இப்போதைய நிலையில் சில நடைமுறை சிக்கல் நிலவுகிறது பாஸ்டாக் வழங்கும் வங்கிகளின் பட்டியல் ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐ.டி.எஃப்.சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி, கருர் வைஸ்யா வங்கி, ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி, Paytm பேமென்ட் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, சிண்டிகேட் வங்கி, பெடரல் வங்கி, தென்னிந்திய வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, சரஸ்வத் வங்கி, ஃபினோ பேமென்ட்ஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, சிந்து வங்கி, யெஸ் வங்கி, யூனியன் வங்கி, நாக்பூர் நகரிக் கூட்டுறவு வங்கி போன்றவை, பாஸ்டேக் வழங்குகின்றன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews