Union Public Service Commission எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்தில் சேருவதற்கான UPSC NDA தேர்வை நவம்பர் 17 ஆம் தேதி நடத்தியது. National Defence Academ NDA யில் சேருவதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், UPSC தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த நிலையில், UPSC NDA 2 தேர்வு முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தகுதி பெற்றவர்களின் விபரங்கள், பெயர், தேர்வு எண் ஆகியவை PDF பைலாக கொடுக்கப்பட்டுள்ளது.
படி 1: முதலில் விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in என்ற இணையளத்துக்குச் செல்ல வேண்டும்
படி 2: முகப்பு பக்கத்தில் What’s New என்ற பகுதியில் National Defence Academy and Naval Academy Examination (II), 2019 என்ற லிங்க் இருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 3: இப்போது NDA தேர்வு முடிவுகள் அடங்கிய மற்றொரு பக்கம் திறக்கப்படும். அதில் நேரடியாக சென்று தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
படி 4: தேர்வர்கள் Ctrl+F என்ற தேடுதல் ஆப்ஷனை பயன்படுத்தி, தங்களுடைய பெயர் அல்லது பதிவு எண் டைப் செய்ய வேண்டும்.
படி 5: இதன் மூலம் தேர்வர்கள் தங்களுடைய UPSC NDA 2 தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
நேரடியாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு இங்கு க்ளிக் செய்யவும். UPSC NDA 2 2019
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.