Breaking

Tuesday, December 10, 2019

ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நாடு முழுவதும், ஒரு கோடி இளைஞர்களுக்கான, வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கான இலக்கு, எட்டப்படும் நிலையில், உள்ளது. வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு, இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காக, 'பிரதம மந்திரி கவுசால் விகாஷ்' திட்டம், மத்திய அரசால், செயல்படுத்தப்பட்டுவருகிறது. கடந்த 2015ல் துவங்கப்பட்ட இத்திட்டம், 2020ல் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சியை வழங்கும் இலக்கைக் கொண்டிருக்கிறது. இத்திட்ட அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும், இதுவரை, 70 லட்சம் பேருக்கு, இத்திட்டம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. இலக்கில், 70 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. தற்போது, பயிற்சி வழங்கப்படுபவர்களையும் சேர்த்தால், 90 சதவீத இலக்கு எட்டப்பட்டு விடும். இத்திட்டம் இரு கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூன்றாவது கட்டம், 2020 மார்ச்சுக்குப் பிறகு செயல்படுத்தப்படும். அப்போது, இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டதாகவும், பல்வேறு புதிய திட்டங்களுடனும் அமலுக்கு வரும். தமிழகத்தில் மட்டும், இதற்கென 80க்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளன. திருப்பூர் பின்னலாடை தொழிலகங்களில், வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். ஒடிசாவில் இருந்து, இங்கு வந்து பணிபுரியும் தொழிலாளர்களில் பலருக்கு, அந்த மாநிலத்திலேயே இத்திட்டம் மூலம், பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog