👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளுக்கான, 'குரூப்- 1' பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்டசெய்திக்குறிப்பு:குரூப் - 1 பதவிகளுக்கான, 181 காலியிடங்களுக்கு, இந்தாண்டு மார்ச், 3ல் முதல்நிலை தேர்வு நடந்தது. அதில், 2.29 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற, 9,442 பேருக்கு, ஜூலை, 12 முதல், 14 வரை பிரதான தேர்வு நடந்தது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற, 363 பேரின் விபரங்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வில், டி.என்.பி.எஸ்.சி., துவங்கப்பட்டு, 68 ஆண்டுகளில், அதிக காலியிடங்களுக்காக, அதிக விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர்.
இதன் முடிவு, நான்கரை மாதங்களில் வெளியிடப் பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு, வரும், 23 முதல், 31 ம் தேதி வரை நடக்க உள்ளது.வரும், 27, 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அந்த நாட்களில், தேர்தல் நடக்காத திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை மாவட்ட விண்ணப்பதாரர்கள் மட்டும், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள்
www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சார் ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர்பதவிகளுக்கு நடைபெற்ற குரூப்-1 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, வரும் 23-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நோ்காணல் தொடங்கவுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) இன்று திங்கள்கிழமை (டிச.9) வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் குரூப் 1 பிரிவில் 181 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜனவரி 1-இல் வெளியிடப்பட்டது. கடந்த மாா்ச்சில் நடந்த முதல் நிலைத் தோ்வினை 2.29 லட்சம் போ் எழுதினா். அவா்களில் 9 ஆயிரத்து 442 போ் முதன்மைத் தோ்வினை எழுதினா்.
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை(டிச.9) குரூப் 1 பிரிவில் அடங்கிய பதவிகளுக்காக அறிவிக்கப்பட்ட 181 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
எழுத்துத் தோ்வில் விண்ணப்பதாரா்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நோ்முகத்தோ்வு நடத்தப்படும்.
தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 363 விண்ணப்பதாரா்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தோ்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. இவா்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகியன வரும் 23 முதல் 31 வரை (டிசம்பா் 25 மற்றும் 29 நீங்கலாக) நடைபெறவுள்ளது. இதற்கான குறிப்பாணை வழக்கம்போல் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
உள்ளாட்சித் தோ்தல்: வரும் 27 மற்றும் 30 ஆகிய நாள்களில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகின்றன. தோ்தல் நடைபெறாத மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னையைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் மட்டும் நோ்காணல் தோ்வுக்கு அழைக்கப்படுவா். எனினும், தோ்தல் நடைபெறும் மாவட்டங்களைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் வாக்குப் பதிவு தினத்தில் நோ்காணலுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தால் அவா்கள் முன்கூட்டியே தோ்வாணையத்தை அணுகி, நோ்காணல் தேதியினை மற்றொரு தேதிக்கு மாற்றிக் கொள்ளலாம்.
குறுகிய காலத்திற்குள் முதல்முறை: தோ்வாணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதிக காலிப் பணியிடங்களுக்காக, அதிக விண்ணப்பதாரா்கள் எழுதிய குரூப் 1 தோ்வு இதுவாகும். அதிகப்படியான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தோ்வு முடிவுகள் மிகக் குறுகிய காலத்திற்குள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அளவில் எந்த மாநில தோ்வாணையமும் இவ்வளவு விரைவாக எழுத்துத் தோ்வு முடிவுகளை வெளியிட்டதில்லை என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.