Search This Blog
Monday, December 09, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று துவங்குகிறது.
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. 'புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை செய்யாமல் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்' என தி.மு.க. உச்ச நீதிமன்றம் சென்றது. இதையடுத்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதன்படி ஊரக உள்ளாட்சிகளுக்கு டிச. 27 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் மீதமுள்ள 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான மனுதாக்கல் இன்று துவங்குகிறது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு, ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு, சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் மனுத்தாக்கல் செய்யவேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
மனுதாக்கல் செய்யும் போது, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, 1,000 ரூபாய்; ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு, 600 ரூபாய்; ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 200 ரூபாய், 'டிபாசிட்' கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 50 சதவீத சலுகை தரப்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர், அதிகபட்சமாக, 1.70 லட்சம் ரூபாய்; ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர், 85 ஆயிரம் ரூபாய்; ஊராட்சி தலைவர் வேட்பாளர், 34 ஆயிரம் ரூபாய்; ஊராட்சி வார்டு உறுப்பினர், 9,000 ரூபாய் மட்டுமே, தேர்தல் செலவாக செய்ய வேண்டும். தேர்தல் முடிந்த, 30 நாட்களில் செலவு விவரங்களை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று மனு தாக்கல் துவக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.