School Morning Prayer 07/11/19 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 07, 2019

Comments:0

School Morning Prayer 07/11/19


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

திருக்குறள்


அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:313

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

விளக்கம்:

நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.

பழமொழி

A honey tongue and a heart of gall.

 அடி நாக்கிலே நஞ்சும்  நுனி நாக்கில் தேனும்.

இரண்டொழுக்க பண்புகள்
1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.

பொன்மொழி

நம்மிடம் நேர்மை, அன்பு,சுயநலமின்மை, நம்பிக்கை இவையாவும் இருப்பின்  தீமையைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் வராது.

-----விவேகானந்தர்

பொது அறிவு


1. சனி கிரகத்தின் நிறம் எது ?
 மஞ்சள்

2.பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பெருங்கடல் எது?   அட்லாண்டிக் பெருங்கடல்.

English words & meanings

* Zoogeology – study of fossil animal remains. புதையுண்ட விலங்குகள் குறித்த படிப்பு.

* Zincograph - Aristic work done on Zinc plate. துத்த நாக தட்டில் செய்ய படும் நுண் வேலை.

ஆரோக்ய வாழ்வு

பதநீரில் உள்ள குளுக்கோஸ் மெலிந்து தோய்ந்த வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியைத் தருகிறது.

Some important  abbreviations for students

* DC -  direct current

* DIY do-it-yourself

நீதிக்கதை

வழிபோக்கனும் வைரகல்லும்


ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது. அது வைரம் என்று அறியாமல், விலை போகுமா? என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான். அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்.

ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான். ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான். இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.

ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும். அறிவில்லாமல் விற்றுவிட்டாயே! என்று திட்டினான். அதற்கு அவன், அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள் என்றான்.

வியாழன்
அறிவியல்

அறிவோம் அறிவியல்

வாழைப் பழமும் வளிமண்டல அழுத்தமும்


தேவையான பொருட்கள் : சிறிது பஞ்சு, பொடித்த கற்பூரம் அல்லது ஆல்கஹால், சிறிது வாயகன்ற குப்பி, நெருப்பு பெட்டி,ஒரு வாழைப்பழம்.

செய்முறை : பஞ்சை ஆல்கஹாலில் தோய்த்து அல்லது பொடித்த கற்பூரத்தில் தேய்த்து குப்பியினுள் இடவும்.நெருப்பு பஞ்சில் பற்ற வைக்கவும் வாழைப்பழம் பாதி உரித்து குப்பியின் வாயில் வைக்கவும். இப்பொழுது பஞ்சு சிறிது நேரம் எரிந்து அணையும் அப்போது வாழைப்பழம் தோல் உரிந்து உள்ளே செல்வதை காணலாம்.

அறிவியல் :பஞ்சு எரியும் போது குப்பியின் உள்ளே உள்ள ஆக்ஸிஜன் உபயோகபடுத்தப் பட்டு அழுத்தம் குறையும். வெளியே உள்ள அழுத்தம் அதிகமாக இருப்பதால் வாழைப்பழத்தை உள்ளே அழுத்தும். எனவே வாழைப்பழம் தோல் உரிந்து உள்ளே சென்றது

இன்றைய செய்திகள்

07.11.19

*பாரீஸ் கால நிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

*அதிக கொழுப்பு, காரம், இனிப்பு, உப்பு உள்ள துரித உணவுகளை பள்ளி கேன்டீன்களில் தடை செய்ய வேண்டும் -- மத்திய அரசு ஆலோசனை.



*செங்கல்பட்டில் சா்வதேச யோகா இயற்கை மருத்துவ அறிவியல் மையம்: முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

*பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 42 மாணவர்களைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற இன்ஸ்பெக்டர், அவர்களுக்கு 1,330 திருக்குறளையும் எழுதும் தண்டனை விதித்தார்.

*சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.

Today's Headlines

🌸The United States of America has officially announced to the United Nations that they were withdrawing from the Paris Climatic Change Agreement.

 🌸High-fat, sweet, salty and fast foods should be banned in school canteens - central Government is on consultation about this

 🌸 Chief minister.Mr. Palanichamy laid the foundation for International Yoga Natural Medicine Science Center at Chengalpattu.

 🌸Inspector took 42 students to police custody after a clash between them in Palayamkottai.They were asked to write 1330 Thirukural as punishment.

 🌸India's Saina Nehwal lost to Chinese shuttler  in China Open Badminton.

👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews