👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கான கீஆன்சரில் தவறான விடைகளுக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த மணிமாறன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பொருளாதாரத்தில் எம்பில், எம்எட் முடித்துள்ளேன். மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற தகுதி உண்டு. இந்நிலையில், அரசு மேனிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வாணையத்தால் கடந்த ஜூன் 12ல் வெளியானது. இதில், பொருளாதாரத்தில் 211 காலியிடங்கள் இருந்தது. செப். 27ல் ஆன்லைன் தேர்வு நடந்தது. அக். 26ல் முடிவுகள் வெளியானது. நான், 68 மதிப்பெண் பெற்றேன். ஆனால், 10 நாட்களுக்கு பிறகு கீ ஆன்சர் வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவு அடிப்படையில் 211 காலியிடத்திற்கு 139 பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். பல கேள்விகளுக்கு பல பதில்கள் தவறாக இருந்தது. பல பதில்களில் முரண்பாடுகள் உள்ளன. தொடர்ந்து விடுமுறை காலமாக இருந்ததால் இதுகுறித்து உடனடியாக புகார் அளிக்க முடியவில்ைல. நவ. 8ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. எனவே, நான் அளித்த சரியான விடை அடிப்படையில் என்னையும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். தவறான பதில்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கவும், அதுவரை பொருளாதார பாடத்திற்கு யாரையும் நியமிக்க கூடாது எனவும், எனக்கு பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, மனு குறித்து டிஆர்பி தலைவர், உயர்கல்வித்துறை செயலர், பள்ளி கல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.