யாருக்கு கிடைக்கும்?
இந்த ஆண்டில் ப்ளஸ்டூ அல்லது பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதி குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேறி, உயர் படிப்புக்காக தற்போது விண்ணப்பித்துள்ளவர்களுக்குக் கிடைக்கும். இவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளரின் ஆண்டு வருமானம் ரூ.60 ஆயிரத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
எல்.ஐ.சி., வழங்கும் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பைப் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எல்.ஐ.சி.,யின் இணையதளத்திற்கு சென்று ஸ்காலர்ஷிப் தொடர்புடைய கேள்விகளுக்கு முழுமையாகப் பதில் அளிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களில் தகுதி உடையவர்களுக்கு மட்டும் தொடர்புடைய கோட்டத்திலிருந்து தகவல் கிடைக்கும். அப்போது கோட்ட நிர்வாகம் கேட்கும் உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டியிருக்கும். முழுமையான தகவல்களுக்கு எல்.ஐ.சி.,யின் இணையதளத்தைப் பார்க்கவும்.
இணையதள முகவரி: www.licindia.in
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.