👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷனின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் மீண்டும், உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டத்தைப் பெற்று இருக்கிறார். பில் கேட்ஸுக்கு முன், அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான ஜெஃப் பிசாஸ் தான் அந்த இடத்தில் அமர்ந்து இருந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிசாஸ் தான் உலகின் நம்பர் பணக்காரர் என்கிற சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், அமெரிக்க அரசின் பாதுகாப்பு விவரங்களை கவனித்துக் கொள்ளும் பெண்டகன் அமைப்பு, மைக்ரோசாஃப்டுக்கு 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள க்ளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்தைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு ஒப்பந்தத்தை வென்றதால் மட்டுமே, அமெரிக்க பங்குச் சந்தையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 4 சதவிகிதம் வரை அதிகரித்தது.
இப்படி மைக்ரோசாஃப்ட் நிறுவன பங்குகள் விலை அதிகரித்ததால், பில் கேட்ஸ் தன் வசம் வைத்திருக்கும் மைக்ரோசாஃப்ட் பங்குகளின் விலையும் அதிகரித்து, பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 110 பில்லியன் டாலர் வரைத் தொட்டது என்கிறது லைவ் மிண்ட் பத்திரிக்கை.
இதே நேரத்தில் அமேசான் நிறுவனத்தின் பங்கு விலை சுமாராக 2 சதவிகிதம் வரை இறக்கம் கண்டது. எனவே அமேசானின் ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு சுமாராக 108.7 பில்லியன் டாலருக்கு சரிந்ததாகச் சொல்கிறது மிண்ட் பத்திரிக்கை.
எனவே பில் கேட்ஸ் மீண்டும் கபாலி ரஜினி போல எப்படி போனாரோ அப்படியே திரும்பி வந்து இருக்கிறார். கடந்த மாதத்தில் கூட இதே போல, 64 வயதான பில் கேட்ஸ், 55 வயது ஜெஃப் பிசாஸை இண்ட்ரா டே அடிப்படையில் முந்தி, உலகின் முதல் பணக்காரர் பட்டத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அப்போதும், அமேசான் நிறுவன பங்குகளின் விலை இறக்கம் கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்பு தான், அமேசான் கம்பெனியின் நிறுவனர் ஜெஃப் பிசாஸ் மற்றும் அவரின் மனைவி மெகனிஸ் பிசாஸ் விவாகரத்து வாங்கினார்கள். அப்போது மனைவிக்கும் கொஞ்சம் சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்க வேண்டி இருந்தது. ஆகையால் தான் இப்போது பில் கேட்ஸால், அமேசானின் ஜெஃப் பிசாஸ் உடன் போட்டி போட முடிகிறது. இல்லை என்றால் சுமார் 150 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜெஃப் பிசாஸ் தன்னன் தனியாக, உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்கிற சிம்மாசனத்தில் அசால்டாக அமர்ந்து இருப்பார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U