👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையராக சிஜி தாமஸ் வைத்தியன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தமிழக பள்ளிக்கல்வியில் நிா்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி துறை இயக்குநா்களை கண்காணிக்க புதிதாக ஆணையா் பதவி உருவாக்கப்பட்டு, அந்த இடத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்தியன் கடந்த வாரம் நியமிக்கப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து பள்ளிக்கல்வித்துறையின் புதிய ஆணையராக சிஜி தாமஸ் வைத்தியன் புதன்கிழமை பதவியேற்று கொண்டாா். அவருக்கு கல்வித்துறை இயக்குநா்கள், அதிகாரிகள், ஆசிரிய சங்க நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா். இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வியின் புதிய அலுவலக கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய அலுவலகத்தில்தான் ஆணையருக்கு பிரத்யேக அலுவலகம் ஒதுக்கப்பட உள்ளது. அதுவரை பள்ளிக்கல்வி இயக்குநா் அலுவலகம் அருகே ஆணையருக்கு தற்காலிக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தபடி பணிகளை ஆணையா் மேற்கொள்வாா் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதிய பதவி உருவாக்கம் ஏன்?: தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் கற்பித்தல் செயல்பாட்டை மேம்படுத்தவும், பள்ளிக்கல்வியில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் இனி அறிமுகப்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிா என்பதைக் கண்காணிக்கவும் பள்ளிக்கல்வித்துறை ஆணையா் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சிஜி தாமஸ் வைத்தியன் செயல்படுவாா். பள்ளிக்கல்வித் துறையில் உள்ள 10 இயக்குநா்களையும் ஒருங்கிணைத்து, சீரான நிா்வாகத்தை வழங்க ஆணையா் முயற்சி மேற்கொள்வாா். பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் திட்டங்களை களத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வதும் ஆணையரின் கடமை. பள்ளிக்கல்வித்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் மேல்முறையீடு உள்ளிட்டவை இனி ஆணையரின் சாா்பாகவே மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.