Search This Blog
Friday, November 29, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார்கள். தற்போது தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துள்ள நிலையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மாற்றுத்திறனாளிகளின் பிரச்னையை களைவதற்கு பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சென்னை ஐஐடியில் மாற்றுத்திறனாளிகள் பிரச்னைகளை களையும் கருவிகள், மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை ஐஐடியில் ஆண்டுதோறும் சாஸ்திரா என்ற பெயரில் தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள், கண்காட்சி நடத்தப்படடு வருகிறது. இந்நிலையில் 2020ம் ஆண்டில் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் சாஸ்திரா தொழில்நுட்ப போட்டிகள், கண்காட்சியில் மாற்றுத்திறனாளிகள் பிரச்னைகளையும் களைவதற்கான சிறந்த கருவிகள், மென்பொருட்களை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் கல்லூரி மாணவர்கள், தங்களின் ஆராய்ச்சி திட்டத்தில் என்னென்ன செய்யப்போகிறார்கள் என்பதை எழுத்து வடிவில் டிசம்பர் 7ம் தேதிக்குள் atmakeathon@shaastra.org என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் atmakeathon.shaastra.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்ட கருவிகளின் மாதிரிகள், மென்பொருள்களுக்கு சென்னை ஐஐடி, இரு தனியார் நிறுவனங்கள் சார்பில் சான்றிதழ், பணப்பரிசு வழங்கப்பட உள்ளது. அனைத்து கல்லூரி மாணவர்களும் தங்களின் ஆராய்ச்சி திட்டங்களை சமர்பிக்கலாம். மாணவர்கள் தங்களின் எழும் கேள்விகள் சந்தேகங்களை outreach@shaastra.org என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி தெளிவு பெறலாம்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
மென்பொருள் உருவாக்கும் போட்டி: கல்லூரி மாணவர்களுக்கு ஐஐடி அழைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.