கல்வியியல் பல்கலைக்கு துணைவேந்தர் நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 27, 2019

Comments:0

கல்வியியல் பல்கலைக்கு துணைவேந்தர் நியமனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், துணைவேந்தர் பணியிடம் காலியாக இருப்பது குறித்து, நம் நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டார். கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம், பேராசிரியர் பஞ்சநாதம், 57, பணி நியமன ஆணையை பெற்றார். கும்பகோணத்தை சேர்ந்த இவர், மூன்று ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார். துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பஞ்சநாதம், 29 ஆண்டுகளுக்கு மேலாக, கற்பித்தல் அனுபவம் உடையவர்.
சர்வதேச அளவில், 84 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். ஐந்து புத்தகங்கள் மற்றும் 33 ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.மேலாண் துறையில், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக, 35 நாடுகளில் உள்ள, கல்வி நிறுவனங்களுக்கு சென்று வந்துள்ளார். நிர்வாகத்தில், 12 ஆண்டுகள் அனுபவம் உள்ளன. இவர், 2017ல், சிறந்த பேராசிரியருக்கான விருதையும், 2018ல், சிறந்த ஆராய்ச்சி வழிகாட்டிக்கான விருதையும் பெற்றவர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக என். பஞ்சநாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பஞ்சநாதம் 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தரை 3 வாரங்களுக்குள் நியமிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை அண்ணா நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், 2017ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்திற்கு ஏதாவது ஒரு துறையில் முனைவர் பட்டம் பெற்றால் போதும் என்று உள்ளதாகவும், அது ஏற்கத்தக்கதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த அரசாணையை ரத்து செய்வதோடு, துணை வேந்தராக கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றவரை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 3 வாரங்களுக்குள் துணைவேந்தரை நியமனம் செய்ய உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews