Breaking

Monday, November 18, 2019

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப முடிவு தகுதியானவர்களின் விவரம் கேட்பு

👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கு தகுதியான ஆசிரியர்களை பரிந்துரை செய்ய முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் பெரும்பாலானவர்கள் உரிமை விடல் செய்துவிட்டதால் காலி யிடங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதுமாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த காலிப் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு தகுதியான முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்து திருத்தங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். மேலும், பட்டியலில் இருப்பவர்கள் பதவி உயர்வுபெற தகுதியானவர்களா என்பதையும், ஒழுங்கு நடவ டிக்கை எதுவும் நிலுவையில் உள்ளதா உள்ளிட்ட விவரங்களை பரிசீலனை செய்து பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே பதவி உயர்வு கலந்தாய்வு முடிவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog