ஒரு வாரத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போகும் அமைச்சர் செங்கோட்டையன்..! Read More - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 20, 2019

ஒரு வாரத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போகும் அமைச்சர் செங்கோட்டையன்..! Read More

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
30 வருடம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) பெறுவது குறித்து ஒரு வாரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம், தோளூர்பட்டி கொங்கு நாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான 62-வது (2019-2020-ம் ஆண்டு) குடியரசு தின தடகள போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ்.வளா்மதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் விளையாட்டு வீரர்களுக்கு வாரம் ஒருமுறை முழுநாள் பயிற்சி அளிக்கவும், அதேபோல விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் நூறு ரூபாய் ஊக்கதொகையை அதிகரித்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். 30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்கிற திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஒரு வாரத்திற்குள் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார். இன்னும் ஒரு மாதத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளிகளில் இணையதள வசதியுடன் 10 கணினிகளும், மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினிகளும் வழங்கப்படவுள்ளது. டிசம்பா் இறுதிக்குள் 92,000 ஸ்மார்ட் போர்டுகள் கொண்டு வரப்படும். மேலும், நிதி ஆயோக் தர குறியீட்டில் இந்த கல்வி ஆண்டில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கும் என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு தான் பள்ளி இடை நிற்றலில் குறைவாக இருப்பதில் முதலிடம் பிடித்திருக்கிறது. 5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் தான் பொதுதேர்வு நடைபெறும். இந்த பொதுதேர்வு மாணவர்களின் கல்விதிறனை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். மாணவர்கள் இடைநிற்றல் என்கிற நிலைக்கு தமிழ்நாடு வழிவகுக்காது என அஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் விகிதத்தை விட, 12 ஆயிரம் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளதால், விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்துக்கு தனித்தனி விதிகள் பின்பற்றப்படுகின்றன. தொடக்க பள்ளிகளுக்கு, ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர் எண்ணிக்கைக்கு விகிதத்துக்கு ஏற்ப, ஆசிரியர்கள்நியமிக்கப்படுகின்றனர்.
பட்டியல் தயாரிப்பு நடுநிலை முதல் மேல்நிலை பள்ளிகள் வரையிலும், மாணவர் எண்ணிக்கை மட்டுமின்றி, பாட வாரியாகவும் கணக்கிட்டு, ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பள்ளிகளில், நிரந்தர பணி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து, பள்ளி கல்வித்துறை பட்டியல் தயாரித்து உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளிகள், பாட வாரியாக மற்றும்வகுப்புகள் வாரியாகவும், மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தின் படியும், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும், 12 ஆயிரம் ஆசிரியர்கள், தேவைக்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதால், ஆசிரியர்களின் தேவை குறைந்து, ஆசிரியர்கள் உபரியாக இருப்பது அதிகரித்து உள்ளது. இந்த எண்ணிக்கையால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
நடவடிக்கை உபரி ஆசிரியர்களால், அரசுக்கு பல கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது.எனவே, செலவை ஈடுகட்டும் வகையில், இந்த ஆசிரியர்களை, பள்ளி கல்வியின் நிர்வாக பணிகள், ஒருங்கிணைந்த கல்வி திட்டம் உள்ளிட்டவற்றில், மாற்று பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருச்சியில் தகவல் அதேபோல, ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ள ஆசிரியர்களுக்கு, வி.ஆர்.எஸ்., என்ற விருப்ப ஓய்வு திட்டம் வர உள்ளது. திருச்சியில், விளையாட்டு துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற, அமைச்சர் செங்கோட்டையன், இதை அறிவித்துஉள்ளார்.பள்ளி கல்வியில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி விட்டு, சுய விருப்பத்துடன் ஓய்வுபெற விரும்பினால், அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என, தெரிகிறது. இதற்கான உத்தரவு, விரைவில் வர உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews