👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'தமிழகத்தில் மேலும், மூன்று மருத்துவ கல்லுாரிகள் துவங்க அனுமதி கோரப்பட்டு உள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தமிழகத்தில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், 1.58 கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், 255 அரசு மருத்துவமனைகளும், 747 தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சை அளித்து வருகின்றன.இந்த திட்டத்தில் சிறப்பாக செயலாற்றிய, 174 தனியார் மருத்துவமனைகளுக்கு, நற்சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை, அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக செயலாற்றிய, தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிக்கும் வகையில், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில், தமிழகத்தில், 2012ல் இருந்து இதுவரை, 40.53 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.இவர்களுக்கு, 6,451 கோடி ரூபாய் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மருத்துவ கல்லுாரிகளின் பூர்வாங்க பணிகளுக்கு, தலா, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், புதிய மருத்துவ கல்லுாரிகள் அமைக்க விண்ணப்பித்துள்ளோம்; அதற்கான அனுமதியும் கிடைக்கும் என்ற, நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், சுகாதார திட்ட இயக்குனர் நாகராஜ், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் செந்தில்ராஜ் பங்கேற்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U