WhatsApp Update: வாட்ஸ்அப்பில் அறிமுகமான Splash Screen அம்சம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 20, 2019

Comments:0

WhatsApp Update: வாட்ஸ்அப்பில் அறிமுகமான Splash Screen அம்சம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சமீபத்தில் காணப்பட்ட ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டில் சில புதிய அம்சங்களை காணமுடிகிறது. இந்த புதிய அம்சங்கள் பீட்டா பதிப்பில் உருட்டப்பட்டுள்ளதால், இந்த புதிய அம்சங்கள் ஆனது கூடிய விரைவில் பொதுவான பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்ன அம்சங்கள் உருட்டப்பட்டுள்ளது? அதன் பெயர்கள் என்ன? அதன் நன்மைகள் என்ன? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும். சமீபத்தில் கிடைக்கப்பெற்றுள்ள ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டாவில் Splash screen மற்றும் hide muted status போன்ற அம்சங்களை காணமுடிகிறது. குறிப்பாக ஸ்ப்ளாஷ் ஸ்க்ரீன் என்பது வாட்ஸ்அப்பின் டார்க் மோட் அம்சமானது எப்படி இருக்கும் என்பதை நமக்கு காட்டுகிறது என்றே கூறலாம்.
WABetaInfo வழியாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஆனது பீட்டா பயனர்களுக்கு தற்போது பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. ஐஓஎஸ்-க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் சேர ஆர்வமுள்ளவர்கள் டெஸ்ட்ஃப்லைட் ஆப்பை பதிவிறக்கலாம். வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சங்கள் ஆனது 2.19.110 வெர்ஷன் வழியாக அணுக கிடைக்கிறது இந்த புதிய வாட்ஸ்அப் ஸ்ளாஷ் ஸ்க்ரீன் அம்சம் ஆனது நீங்கள் ஆப்பை திறக்கும்போதே தோன்றும். முன்னதாக வாட்ஸ்அப்பை திறந்தால் நேரடியாக சாட்டிற்கு செல்லும் அல்லவா? இனிமேல் பயனர்கள் தங்கள் ஐபோன்களில் வாட்ஸ்அப்பை திறக்கும்போதெல்லாம் வாட்ஸ்அப் லோகோ ஒன்று காட்சிப்படும். பின்னரே சாட்டிற்குள் செல்வார்கள். ஆண்ட்ராய்டு பீட்டா அப்பிலும் வாட்ஸ்அப்பின் இந்த ஸ்ப்ளாஷ் ஸ்க்ரீன் அம்சம் அணுக கிடைக்கிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் சில காலமாக இந்த அம்சத்தின் கீழ் பணியாற்றி வருகிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த அம்சம் ஆனது நீங்கள் ஏற்கனவே ம்யூட் செய்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை, முற்றிலுமாக ஹைட் செய்ய அனுமதிக்கிறது. முன்னதாக, ம்யூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்கள் ஆனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பட்டியலின் கீழே "மங்கலாக" தோன்றும். ஆனால் இந்த அப்டேட் ஆனது குறிப்பிட்ட ஸ்டேட்டஸ்களை திரையில் இருந்து முற்றிலுமாக நீக்கும். வாட்ஸ்அப் பயனர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் டார்க் மோட் அம்சமானது பல்வேறு பீட்டா வெர்ஷன் அப்டேட்ஸ் வழியாக காணப்பட்டது. இருந்தாலும் கூட புதிய பீட்டா அப்டேட் ஆனது டார்க் மோடை எனேபிள் செய்யும் பட்சத்தில், வாட்ஸ்அப் மெசேஜ்கள் ஆனது எப்படி காட்சிப்படும் என்பதை காட்டுகிறது. இது முதலில் Android க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் கிடைத்தது. ஆக இந்த டார்க் மோட் ஆனது மிக விரைவில் வாட்ஸ்அப் பயனர்களுக்குத்தான் முதலில் கிடைக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews