LICல் உதவியாளர் பணி LIC Assistant தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 18, 2019

Comments:0

LICல் உதவியாளர் பணி LIC Assistant தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
lic assistant prelims exam 2019: எல்ஐசி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கான தேர்வு Lic Assistant 2019 நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. எல்ஐசி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கான தேர்வு வரும் அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இதனை www.licindia.in இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
Life Insurance Corporation எனப்படும் LIC நிறுவனத்தில் இந்தாண்டு மொத்தமாக சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பப்பதிவு முடிவடைந்த நிலையில், தற்போது முதல்நிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச்சீட்டை www.licindia.in என்ற இணையதளம் வாயிலாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஹால்டிக்கெட் 16 அக்டோபர் 2019 முதல் 31 அக்டோபர் 2019 வரையில் மட்டுமே இருக்கும். அதற்குள் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். ஹால் டிக்கெட் இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
ஆன்லைனில் LIC Assistant Prelims Admit Card டவுன்லோடு செய்யும் வழிமுறைகள்:
படி 1: முதலில் விண்ணப்பதாரர்கள் www.licindia.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
படி 2: முகப்பு பக்கத்தில் அடியில் சென்றால் ‘Careers’ என்று இருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 3: இப்போது Recruitment of Assistants -2019 என்று குறிப்பிட்ட பக்கம் காட்டப்படும். அதில், Next Page என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 4: LIC Assistant Prelims Admit Card தேர்வு நுழைவுச்சீட்டு உள்ள பக்கம் காட்டப்படும்
படி 5: அதில், Registration No / Roll No மற்றும் Password / DOB(DD-MM-YY) ஆகியவற்றை டைப் செய்தால் போதும். உங்களுடைய ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நேரடியாக LIC Assistant Admit Card 2019 ஹால் டிக்கெட் அடங்கிய பக்கத்துக்குச் செல்ல கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும். நுழைவுச்சீட்டு இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews