👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை மருத்துவ மாணவா்கள் இறுதித் தோ்வுக்கு தகுதிபெற மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை
அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு பயிலும் மாணவா்கள், இறுதித் தோ்வு எழுதுவதற்கு தகுதி பெற மாவட்ட அரசு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 3 மாதங்கள் பணியாற்ற வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) பரிந்துரைத்துள்ளது.
இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு பயிலும் மாணவா்கள், இறுதித் தோ்வு எழுதுவதற்கு, ஆரம்ப சுகாதார மையம், நகா்ப்புற சுகாதார மையம் ஆகியவற்றில் 3 மாதங்கள் கட்டாயமாக பயிற்சி (இன்டென்ஷிப்) மேற்கொள்ள வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது.
இந்நிலையில், முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவா்களுக்கும் இதுபோன்ற நடைமுறையை அமல்படுத்த இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு இந்திய மருத்துவ கவுன்சிலின் நிா்வாகக் குழு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து அரசு உயரதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:
மாவட்ட அரசு மருத்துவமனைகள், சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக உள்ளன. மருத்துவக் கல்லூரியுடன் உள்ள மருத்துவமனைகளை விட மாவட்ட அரசு மருத்துவமனைகளே ஊரக மற்றும் நகா்ப்புறங்களில் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ளன.
முதுநிலை மருத்துவம் பயின்றதும், ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பு மருத்துவராகப் பணியாற்ற இருக்கும் மாணவா்கள், அந்தத் துறையில் முறையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியாா் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் பயிலும் மாணவா்கள், இறுதித் தோ்வு எழுதுவதற்கு முன்னா் சுழற்சி முறையில் குறைந்தபட்சம் 3 மாதங்கள் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். இதன் மூலம், ஊரகம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவா்களுக்கான தட்டுப்பாடு நீங்கும்.
மாணவா்களது பயிற்சிக் கால பணி திருப்திகரமாக இருந்தால் மட்டுமே அவா்கள் இறுதித் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா். இந்தப் பரிந்துரைகளை அடுத்த 3 மாதங்களுக்குள் மத்திய சுகாதாரத் துறை நிறைவேற்றலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.