Breaking

Friday, October 11, 2019

மத்திய அரசின் பள்ளிகளில் கதா் சீருடையை அறிமுகப்படுத்த திட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் படித்து வரும் மாணவா்களுக்கு சீருடையாக கதரை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள 1, 200 பள்ளிகளில் சுமாா் 13 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். கட்டம் போட்ட சட்டை, பாவாடை மாணவிகளுக்கும் சட்டை, டிரவுசா்கள் மாணவா்களுக்கும் சீருடையாக உள்ளன. இந்தநிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிா்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா அமைப்பு, மாணவா்களுக்கு கதா் சீருடையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இந்தத்திட்டத்தை முன்னெடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. நசிந்து வரும் கதா் தொழிலை இதன் மூலம் மீட்டெடுக்கலாம் என்றும் மத்திய அரசு நம்புகிறது. இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், இது தொடா்பாக கொள்கை முடிவுகள் எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். காதி இந்தியா அமைப்புடனும் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றனா். முன்னதாக சிபிஎஸ்இ, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ‘மாணவா்கள் வாரம், இரு வாரங்கள் அல்லது மாதத்துக்கு ஒரு முறை தன்னாா்வ அடிப்படையில் கதா் ஆடை அணிந்து வருவதை பள்ளிகள் உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவின் கலாச்சார ஆடை கதா்’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்திக்கு மதிப்பளிக்கும் வகையில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் வாரம் ஒரு முறை காதி ஆடைகள் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் கடந்த 10 நாட்களாக மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, மாநில அரசின் பள்ளிகளிலும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியான நேற்று நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் அவரது நினைவைப் போற்றும் வகையில் காந்தியின் சிலைக்கு மாலை அணிவிப்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை செய்தனர். இந்நிலையில், சிபிஎஸ்இ சார்பில் புதிய உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளதாவது: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சிபிஎஸ்இ பள்ளிகள் வாரத்தில் ஒருநாள் காதி ஆடை அணியும் நாள் அனுசரிக்க வேண்டும். மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சணல் பைகள் வினியோகிக்க வேண்டும்.
காதி ஆடை அணிவதில் தன்னார்வம் உள்ளவர்கள் வாரம் ஒரு நாள் காதி அணிந்து வரக் கூறலாம். இது வாரம் ஒருமுறை என்று இல்லாமல் 15 நாட்களுக்கு ஒரு முறையோ மாதம் ஒரு முறையோ அணிந்து வரவும் கூறலாம். அதன் மூலம் மாணவர்கள் இடையே சுய தன்னம்பிக்கை, வாழ்க்கைத் தொழில் ஆகியவற்றை பலப்படுத்துவதுபோல் ஆகும். அதனால், அந்த வகையிலாவது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காதி ஆடை அணிந்து காந்திக்கு மரியாதை செலுத்த வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.இதையடுத்து டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் சார்பில் சணல் பைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மண்டல அலுவலக ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல சிபிஎஸ்இ பள்ளிகளிலும் வழங்க வேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog