வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை.. இதை செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 13, 2019

Comments:0

வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை.. இதை செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படலாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், வரும் ஜனவரி 1, 2020-க்குள் கே.ஒய்.சி., எனப்படும், வாடிக்கையாளரை பற்றி அறிந்து கொள்ளும் படிவத்தை புதுப்பிக்காவிட்டால் அவர்களது வங்கி கணக்கு முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் படி, இவை அனைத்து வங்கி கணக்குகளுக்கும் இது கட்டாயம் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு வங்கி கணக்கு முடக்கப்படும் போது அந்த கணக்கில் இருந்து, நேரடியாகவோ, அல்லது ஆன்லைன் மூலமோ பணப்பரிமாற்றம் செய்ய முடியாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ, ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட சில வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கேஒய்சி விவரங்களை புதுபிக்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டல்
அனைத்து வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கே.ஒய்சி விவரங்களை அடுத்த ஜனவரி 1, 2020க்குள் சமர்பிக்க வேண்டியது கட்டாயம் என்றும், இது தோல்வியுற்றால் வங்கிகள் தங்கள் கணக்குகளை முடக்ககூடும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக சில வங்கிகள் மொபைல் எஸ்.எம்.எஸ் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் நினைவூட்டல்களை அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆக வாடிக்கையாளர்கள் தவறாமல் அதை செய்து கொள்ளவது தடையற்ற பண பரிவர்த்தனைக்கு வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
வங்கி கணக்குகள் முடக்கப்படும்
இந்த கே.ஓய்.சி புதிபிக்கப் தவறிய வாடிக்கையாளார்கள் கணக்குகள் முடக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கு சென்றும் கே.ஓய்.சி புதுபித்தலுக்கு சம்பந்தமான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இல்லையேல் வங்கி போர்டலில் புதிபிப்பு கே.ஓய்.சி பிரிவில், எனது கே.ஓய்.சி பிரிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கே.ஓய்.சி விவரங்களை பூர்த்தி செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கணக்கு துவங்கும் போது, அவரை பற்றிய முழுவதுமாக அறிந்து கொள்ள கே.ஒய்.சி எனப்படும், சுயவிபரக் குறிப்புகள் கொண்ட படிவத்தை சமர்ப்பிக்கும் நடைமுறை தற்[போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி வாடிக்கையாளரின் அடையாள சான்று, இருப்பிட சான்று, தொலைபேசி மற்றும் மொபைல் எண், இ - மெயில் முகவரி, புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை வங்கியில் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
எதற்காக இந்த புதுபித்தல் நடவடிக்கை
இந்த, கே.ஒய்.சி ஆவணங்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் பணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்க முடியும் என்றும், மேலும் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்ற முறை மற்றும் இதர தன்மைகளின் அடிப்படையில், இந்த கே.ஒய்.சி புதுப்பிப்பதற்கான கால அளவு மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2 ஆண்டுகள் மற்றும் எட்டு ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எனவும் இந்த கே.ஒய்.சியானது புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
யார் எப்பொழுது கே.ஓய்.சியை மாற்றம் செய்ய வேண்டும்
இதில் அதிக ஆபத்து உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது கே.ஒய்.சியை இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும், இதே நடுத்தர வர்க்கத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது கே.ஓய்.சி படிவத்தை 8 வருடங்களுக்கு ஒரு முறையும், இதே குறைந்த ஆபத்துக்களை உடைய வாடிக்கையாளர்கள் 10 வருடத்திற்கு ஒரு முறையும் இந்த கே.ஒய்.சியை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews