👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றி மாறன் இணைந்துள்ளார்கள். இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலைத் தழுவி இந்தப் படத்தை எடுத்துள்ளார் வெற்றி மாறன். சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணி, 1982-ல் இந்த நாவலை எழுதியுள்ளார்.
இந்நிலையில் அசுரன் படம் நேற்று வெளியானது. கடந்த சில வாரங்களாக அசுரன் படத்தை முன்வைத்து வெக்கை நாவல் குறித்த விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக இருந்தன. இதனால் அந்த நாவலைப் படிக்கும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அமேஸான் தளத்தில், இந்திய அளவில் அதிகம் விற்பனையான கிண்டில் இ புத்தகங்களின் பட்டியலில் பூமணியின் வெக்கை நாவல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதன் இ புத்தகத்தின் தற்போதைய விலை - ரூ. 39. அமிஷ் திரிபாதி, ராபின் சர்மா, சேதன் பகத் போன்ற பிரபல எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தும் பூமணியின் வெக்கை நாவலை விடவும் குறைவான எண்ணிக்கையில் வாசகர்களால் வாங்கப்பட்டுள்ளன. இதனால் அசுரன் படத்தால் வெக்கை நாவலுக்கு ஏராளமான புதிய வாசகர்களும் அதிகக் கவனமும் தற்போது கிடைத்துள்ளன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.