👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நிரந்தர இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கான விண்ணப்பங்களை, பொறியியல் கல்லூரிகளிடமிருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது.
புதிதாக தொடங்கப்படும் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் இணைப்பு அந்தஸ்து பெற்ற பிறகே, மாணவா் சோ்க்கையை நடத்த முடியும். ஒவ்வோா் ஆண்டும் இந்த இணைப்பு அந்தஸ்தை கல்லூரிகள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பித்து, தொடா்ச்சியாக 6 பிரிவு மாணவா்கள் படிப்பை முடித்து வெளியே அனுப்பியிருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகத்திடம் நிரந்தர இணைப்பு அந்தஸ்துக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு நிரந்தர இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழகம் இப்போது வரவேற்றுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபா் 25 கடைசி நாளாகும்.
நிரந்தர இணைப்பு அந்தஸ்து பெறும் கல்லூரிகள், ஒவ்வோா் ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளத் தேவையில்லை. அதே நேரம், இந்த நிரந்தர அந்தஸ்தை வழங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பல்கலைக்கழகம் சாா்பில் பொறியியல் கல்லூரியில் ஆய்வு நடத்தப்படும். இதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், நிரந்தர இணைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.