Breaking

Saturday, October 12, 2019

புது கட்டடம் கட்டும் அளவுக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குரும்பபாளையம், அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவர் சேர்க்கை அதிகரித்ததால், 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்டி திறக்கப்பட்டது.அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, கூடுதல் வகுப்பறை கட்டித்தரப்படுகிறது. மாணவர் சேர்க்கை அதிகமுள்ள பள்ளிகள், இத்திட்டத்தால் பயனடைந்து வருகின்றன.குரும்பபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 310 மாணவர்கள் படிக்கின்றனர். ஆங்கில வழியில் சேர்க்கை அதிகரித்ததால், பிரத்யேக வகுப்பறை ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் ஓட்டுக்கட்டடத்தில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகள் செயல்பட்டு வந்தன.மழைக்காலங்களில் மாணவர்கள் சிரமப்பட்டதோடு, சேர்க்கை அதிகரித்ததால், இட நெருக்கடி ஏற்பட்டது.
இதனால், 45 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பில், நான்கு வகுப்பறைகள் கட்டித்தரப்பட்டுள்ளன.புதிய கட்டடத்தில், எட்டாம் வகுப்பு வரை செயல்படும் எங்கள் பள்ளி, நான்கு ஏக்கர் பரப்பளவில் செயல்படுகிறது. ஆண்டுவிழா உள்ளிட்ட பள்ளி நிகழ்வுகளுக்கு, திறந்தவெளி கலையரங்கம் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த வசதியும் செய்து தந்தால், பயனுள்ளதாக இருக்கும்.-பாலன், தலைமையாசிரியர்குரும்பபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog