ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள உதவித்தொகை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 08, 2019

ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள உதவித்தொகை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி மும்பை மற்றும் ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் ஐ.ஐ.டி.பி.,-மொனாஷ் ரிசர்ச் அகாடமி நிறுவனம் பிஎச்.டி., படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. ஆராய்ச்சிக்கான பிரிவுகள்: அட்வான்ஸ்டு கம்ப்யூடேஷனல் எஞ்சினியரிங், ஸ்டிமுலேஷன் அண்ட் மேனுஃபேக்சர், இன்ஃபிராஸ்ட்ரக்ச்சர் எஞ்சினியரிங், கிளீன் எனர்ஜி, வாட்டர் ரிசோஸ், நானோடெக்னாலஜி, பயோடெக்னாலஜி அண்ட் ஸ்டெம் செல் ரிசர்ச், ஹுமானிட்டீஸ் அண்ட் சோஷியல் சயின்சஸ், டிசைன்.
ஆராய்ச்சிக் காலம்: மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை. உதவித்தொகை விவரம்: இந்த உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், குறைந்தது ஓர் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 3,72,0000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டுக்கு 4,20,000 ரூபாய் வழங்கப்படும். ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் காலத்திற்கு ஆஸ்திரேலிய டாலர் 25,850 வரை உதவித்தொகையாக வழங்கப்படும். எனினும், மாணவர்களின் தகுதிகள், பாடத்திட்டத்தை பொறுத்து உதவித்தொகை மாறுபடும். தேவையான தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை ஐ.ஐ.டி., என்.ஐ.டி., பிட்ஸ் போன்றவற்றில் ஏதேனும் ஒரு கல்விநிறுவனத்தில், அதிக மதிபெண்களுடன் பி.டெக்., / எம்.டெக்., / எம்.இ., / எம்.எஸ்சி. போன்ற படிப்பை முதல்வகுப்பில் முடித்தவர்கள் அல்லது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜி.ஆர்.இ. கேட், சி.எஸ்.ஐ.ஆர்.-நெட், ஜாம் போன்ற ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வை எழுதியிருக்க வேண்டும். மேலும், ஐ.இ.எல்.டி.எஸ்., அல்லது டோஃபல் ஆங்கிலமொழிப் புலமைத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.9.2019. மேலும் முழு விவரங்களுக்கு: www.iitbmonash.org
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews