ராணுவ ஆய்வு & வளர்ச்சி நிறுவனம் பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 08, 2019

ராணுவ ஆய்வு & வளர்ச்சி நிறுவனம் பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் ராணுவ ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (Defence Research & Development Organisation) ஏரோ ஸ்பேஸ் (Aerospace), ஏரோநாட்டிக்கல் (Aero Nautical) பொறியியல், ஸ்பேஸ் எஞ்சினியரிங் & ராக்கெட்டரி (Space Engineering/ Rocketry), ஏவியானிக்ஸ் (Avionics), ஏர்கிராஃப்ட் எஞ்சினியரிங் (Air Craft Engineering) போன்ற இளநிலை (Under Graduation) மற்றும் முதுநிலை (Post Graduation) படிப்புகளுக்கு ‘ஏரோ நாட்டிக்ஸ் ரிசர்ச் & டெவலப்மென்ட் போர்டு’(Aero Nautics Research and Development Board) வழியாகப் பெண்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. இவ்வமைப்பு இளநிலைப் படிப்பிற்கு ரூ.1,20,000 அல்லது ஆண்டு கட்டணம் இவற்றில் எந்தத் தொகை குறைவோ அத்தொகையை வழங்குகிறது. முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு மாதம் ரூ.15,500 என்ற அடிப்படையில் ஆண்டிற்கு ரூ.1,86,000 வழங்குகிறது. இவ்வாறாக பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. (எஞ்சினியரிங் 4 ஆண்டு) ஆகிய இளநிலைப் படிப்பிற்கு 20 மாணவர்களுக்கும் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி. (எஞ்சினியரிங்) ஆகிய முதுநிலைப் படிப்புகளுக்கு 10 மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இளநிலை, முதுநிலை இவற்றைத் தொடர்ந்து உயர்கல்வி படிப்பவர்களுக்கும் அதற்கேற்ப இத்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை பெறும் மாணவர்களுக்கு, அடிப்படைத் தகுதியைத் தவிர வேறு ஒப்பந்தம் உள்ளிட்ட எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தங்கள் இறுதி ஆண்டு ப்ராஜெக்ட் (Project) DRDO, அரசு ஆய்வகம், AR&DB இவற்றில் செய்யவேண்டும். இளநிலை படிப்பவர்கள் இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும். இவர்கள் JEE Main வழியாக பி.டெக்/பி.இ. சேர்ந்திருக்க வேண்டும். ஊக்கத்தொகை பெறுவதற்கு JEE Main தேர்வில் பெற்ற மதிப்பெண் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். முதுநிலைப் படிப்பிற்கான ஊக்கத்தொகை பெற, இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும். பி.இ./பி.டெக். படிப்பில் குறைந்தது 60 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முழு விவரங்களை https://www.drdo.gov.in என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம். ஆன்லைனில் https:/rac.gov.in என்ற இணையதளம் வழியாக 10.9.2019 அன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews